- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த அன்பு மட்டுமே இனி எனக்கு போதும் - பிரபல நடிகரை பிரிந்த மனைவி போட்டாரே...

அந்த அன்பு மட்டுமே இனி எனக்கு போதும் – பிரபல நடிகரை பிரிந்த மனைவி போட்டாரே ஒரு போடு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவிமோகன். ஜெயம் ரவி என்ற தனது பெயரை சமீபத்தில்தான் அவர் ரவி மோகன் என மாற்றிக்கொண்டுள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. நடிகை நித்யா மேனன் இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

ஆனால் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக ரவிமோகன் நடித்த ஜீனி என்ற படம் வெளியாக உள்ளது. இதுதவிர கராத்தே பாபு என்ற படத்தில் ரவிமோகன் நடித்து வருகிறார். அத்துடன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நெகட்டிவ் கேரக்டர் ஒன்றில் நடிகர் ரவிமோகன் இப்போது நடித்துக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

அத்துடன் நடிகர் யோகிபாபு நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை ரவிமோகன் டைரக்‌ஷன் செய்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். அத்துடன் ரவிமோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கும் நடிகர் ரவிமோகன், அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் முக்கிய கேரக்டரில் நடிகர் எஸ்ஜே சூர்யாவும் நடிக்கிறார்.

நடிகர் ரவிமோகன், கடந்தாண்டில் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்துவிட்டார். இப்போது மும்பையில் வாடகை வீட்டில் நடிகர் ரவிமோகன் தங்கியிருந்து சென்னைக்கு படப்பிடிப்பு மற்றும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு வந்து செல்கிறார். பாடகி கெனிஷா என்பவருடன் நெருக்கமாக பழகி வருகிறார். மேலும் நடிகர் ரவிமோகன், ஆர்த்தி விவாகரத்து வழக்கு சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

- Advertisement -

பாடகி மற்றும் ஹீலர் கெனிஷாவுடன் நடிகர் ரவிமோகன் நெருக்கமான நட்பில் இருந்து வருவது குறித்து அவரது மனைவி ஆர்த்தி, ஆவேசமாக பல பதிவுகளை செய்தார். அறிக்கையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் நடிகர் ரவிமோகன், ஆர்த்தியை பிரிந்தது பிரிந்ததுதான். இனி அவருடன் சேர மாட்டேன். அவர் எனது முன்னாள் மனைவிதான். ஆனால் எனக்கு என் பிள்ளைகள்தான் உலகம். அவர்களுக்காகவே வாழ்கிறேன் என்றும் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் ஆர்த்தி ரவி கூறியிருப்பதாவது, மனது கஷ்டமாக இருக்கும்போது பிரியாணி சாப்பிடுவது ஆறுதல். சண்டைகள் இல்லை வார்த்தைகள் இல்லை வாலை ஆட்டி அன்பு காட்டும் செல்லப் பிராணிகள் மட்டும் எனக்குப் போதும். நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதில் ஒரு அமைதி இருக்கிறது. இது என் கல்லூரி காலத்தில் நான் கற்றுக்கொண்டது என்று நடிகர் ரவிமோகனின் மனைவி ஆர்த்தி ரவி, அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்