- Advertisement -
Homeபொழுதுபோக்குகல்கி பட முன்பதிவுக்கு முந்தும் கூட்டம்... பெயர் குழப்பத்தால் மற்றொரு திரைப்படத்திற்கு அடித்த ஜாக்பாட்... ரசிகர்களிடம்...

கல்கி பட முன்பதிவுக்கு முந்தும் கூட்டம்… பெயர் குழப்பத்தால் மற்றொரு திரைப்படத்திற்கு அடித்த ஜாக்பாட்… ரசிகர்களிடம் துணிச்சலான மோசடி…

- Advertisement -

பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, அதிக பட்ஜெட் உள்ள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். ஆனால் அவரின் இந்த முடிவு சுத்தமாக கை கொடுக்கவில்லை. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், பிரபாஸுக்கு அடுத்த திரைப்படம் சாஹோ வெளியானது.

 

- Advertisement -

ஆனால் இந்த திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. உப்புச்சப்பில்லாத திரைக்கதையை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லாததால், சாஹோ திரைப்படத்தை வீட்டுக்கு அனுப்பினர். இதனைத் தொடர்ந்து, ராதேஷ் ஷ்யாம் படத்தில் நடித்தார் பிரபாஸ்.

 

- Advertisement -

காதல் கதையை மையமாகக் கொண்டு வெளிநாடுகளில் இந்த திரைப்படம் பிரம்மாண்ட முறையில் படமாக்கப்பட்டது. ஆனால் கதையில் ஒரு அழுத்தமும் இல்லாததால், மீண்டும் முகம் சுளித்தனர் ரசிகர்கள். பிறகு வெளியான ஆதி புரூஸ் திரைப்படத்தின் மூலம் பிரபாஸ் ட்ரோல் மெட்டீரியலாக மாறினார். சமீபத்தில் வெளியான சலார் மட்டும்தான் அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தது.

 

இந்த நிலையில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார். டாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு கல்கி 2898 ஏடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதிக பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

கமல்ஹாசனுக்கு இதில் வில்லன் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. அண்மையில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவைப்பை பெற்றது. இந்த திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதற்கான முன்பதிவுக்கு, கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். பிரபாஸ் ரசிகர்கள், படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகளை வாங்க குறியாக உள்ளனர். இந்த சமயத்தில் தெலுங்கு நடிகர் ராஜசேகர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான கல்கி திரைப்படமும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

 

இதனால் இணையத்தில் அவசர அவசரமாக புக் செய்யும் ரசிகர்கள் ராஜசேகரின் கல்கி படத்திற்கு தெரியாமல் பதிவு செய்துள்ளனர். இதனால் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ராஜசேகரின் திரைப்படம் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. இதனால் கொதித்து எழுந்த ரசிகர்கள் சம்பந்தப்பட்ட புக்கிங் நிறுவனத்திடம் புகார் தெரிவிக்க, திரையரங்கு சார்பில் மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி இருக்கும் ராஜசேகர், பிரபாஸின் கல்கி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்