- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரதீப் ரங்கநாதன் உடன் சீமான் இருக்கும் போஸ்டர் வைரல்... விக்னேஷ் சிவன் செய்யப்போகும் தரமான செய்கை......

பிரதீப் ரங்கநாதன் உடன் சீமான் இருக்கும் போஸ்டர் வைரல்… விக்னேஷ் சிவன் செய்யப்போகும் தரமான செய்கை… சூப்பர் ப்ரோ.

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களின் பல்ஸ் தெரிந்த இயக்குனர் யார் என்றால் அது நிச்சயம் பிரதீப் ரங்கநாதன் தான். தனது முதல் திரைப்படமான கோமாளிலேயே இதனை அவர் நிரூபித்து விட்டார். மாறிவிட்ட தொழில்நுட்ப உலகத்தில், 90ஸ் கிட்ஸ் களின் மனநிலை எப்படி இருக்கும், அவர்களின் முந்தைய வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என்பதை மிகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை கலந்ததாகவும் கோமாளி திரைப்படத்தின் மூலம் கூறியிருந்தார்.

 

- Advertisement -

இப்படி பிரதீப் ரங்கநாதனுக்கு முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியை கொடுக்க அடுத்த திரைப்படத்தில் அவரை கதாநாயகனாக நடித்தார். இந்த முறை, இன்றைய இளம் தலைமுறையினர் எந்த அளவுக்கு செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள், அது அவர்களை எந்த வகையில் எல்லாம் பாதிக்கிறது, காதல் விஷயத்திலும் அத்தனை தடை போடுகிறதா என்பதை கூறியிருந்தார்.

 

- Advertisement -

சொல்லப்போனால் இந்த திரைப்படத்தை மிகுந்த சுவாரசியமானதாகவும், திரைக்கதையில் அத்தனை விறுவிறுப்பையும் கூட்டி இருந்தார் பிரதிப் ரங்கநாதன். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்தது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இப்படி இரண்டே இரண்டு திரைப்படங்களின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற பிரதீப் ரங்கநாதன், தற்போதைய இயக்கத்திற்கு விடுமுறை கொடுத்துவிட்டு முழுக்க முழுக்க நாயகனாக நடிப்பதில் மட்டுமே ஃபோகஸ் செலுத்தி வருகிறார். இதில் அவர் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.

 

லலித் குமார் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஆனால் இதன் படப் பிடிப்பு மட்டும் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. சொன்ன பட்ஜெட்டில் படத்தை விக்னேஷ் சிவன் எடுக்கவில்லை என்றும், இதற்கு மேல் பணத்தை அளிக்க லலித்குமார் தயாராக இல்லை என்பதால் சூட்டிங் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது.

 

இது ஒரு பக்கம் இருக்க ஓ மை கடவுளே படத்தை எடுத்த அஸ்வின் மாரிமுத்து உடன், பிரதீப் ரங்கநாதன் இணைந்து பணியாற்றி இருக்கும் டிராகன் திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. முதலில் இந்தத் திரைப்படமே திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்திலிருந்து பொங்கலை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இடம் பெற்றுள்ளார். இந்த படத்தில் அவர் பிரதீப்பிற்கு தந்தையாக நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டர் அதனை உறுதிப்படுத்தி இருக்கிறது.

 

- Advertisement -

சற்று முன்