- Advertisement -
Homeபொழுதுபோக்குமுழு நடிகராகவே மாறிப்போன கோமாளி பட இயக்குனர்... அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பும் வந்தாச்சு... ஒருவேளை எஸ்...

முழு நடிகராகவே மாறிப்போன கோமாளி பட இயக்குனர்… அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பும் வந்தாச்சு… ஒருவேளை எஸ் ஜே சூர்யாவை பாலோ பண்றாரோ…

- Advertisement -

கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதற்கு முன்பு youtube களில் குறும்படங்களை வெளியிட்டு வந்த அவர், அந்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்திருந்தார்.

90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையையும், இன்டர்நெட் இல்லாத போது இருந்த சுகமான அனுபவங்களையும் இந்த திரைப்படம் தெள்ளத் தெளிவாக விளக்கியது மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கு அது மிகவும் பிடிக்கும் வகையில் இருந்ததால் கோமாளி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இதன்பிறகு தனது இரண்டாவது படத்தில் தானே கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே என்னும் பெயரில் வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. மிகவும் கம்மியான பொருட்களில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அதனை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி கொடுத்தது.

இந்த திரைப்படத்தில் சமகால பிரச்சனையை விளக்கியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். நவீன தொழில்நுட்ப யுகத்தில் இளைஞர்கள் அனைவரும் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்க அதனால் ஏற்படும் அவஸ்தைகளையும், பிரச்சனைகளையும் தனது திரைக்கதையின் மூலம் விளக்கி இருந்தார் பிரதிப் ரங்கநாதன்.

- Advertisement -

அதுவும் காதலர்கள் தங்களுக்குள் செல்போனை மாற்றிக் கொள்ளும்போது ஏற்படும் பிரச்சனைகளையும் மிகவும் சுவாரசியமாக அவர் கூறியிருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் எந்த மாதிரியான படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், திடீரென நடிப்பு பக்கம் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், அவரது அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. லவ் டுடே திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே இதனை எடுக்கிறது. ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த அஸ்வந்த் மாரிமுத்துவுடன்தான் அவர் இணைந்திருக்கிறார். இதற்கான அறிவிப்பு வீடியோவே அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மே மாதம் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்