குறும்படங்களை எடுத்து அதன் மூலம் சினிமாவை கற்றுக் கொண்டவர் பிரதீப் ரங்கநாதன். ஆரம்ப காலத்தில் இவர் தான் எடுத்த குறும்படங்களை youtube வலைதளத்தில் வெளியிட்டு வந்தார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வளர்த்துக் கொண்ட அவர், கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.
இந்த திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். 90ஸ் கிட்ஸ் களின் வாழ்க்கை முறையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ஜெயம் ரவி தனது பங்கை சரியாக செய்ததால், பலரது பாராட்டையும் இந்த திரைப்படம் பெற்றது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த திரைப்படம் வெற்றி பெற, பிரதீப் ரங்கநாதன் கவனம் ஈர்த்தார்.
இதன் பிறகு தனது இரண்டாவது திரைப்படம் குறித்து அவர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏஜிஎஸ் என்டர்டைம்மனுடன் அவர் ஒப்பந்தம் செய்தார். லவ் டுடே என இதற்கு பெயரிடப்பட்ட நிலையில், அதில் அவரே நாயகனாக நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன் ட்ரெய்லர் வெளியாகி பலரது வரவேற்பையும் பெற்ற நிலையில், லவ் டுடே திரைப்படத்தை பலரும் பாராட்டினர்.
நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்றைய இளைஞர்கள் எப்போதும் செல்போனும் கையுமாக அலைந்து கொண்டிருக்க, அதனையே கதைக்களமாக கொண்டு புத்திசாலித்தனமாக படத்தின் திரைக்கதையை எழுதி இருந்தார் பிரதீப் ரங்கநாதன். யுவன் சங்கர் ராஜா இசையில் பின்னணி இசையும் சச்சிதமாக இருக்க படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
தனது இரண்டாவது படத்திலேயே, 100 கோடி ரூபாய் வசூல் என்னும் சாதனையை படைத்தார் பிரதீப் ரங்கநாதன். இந்த நிலையில் தற்போது அவர் இயக்கத்திற்கு லீவு விட்டு உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்னும் திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் கதையை சிவகார்த்திகேயனுக்காக விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார். ஆனால் கால் சீட் பிரச்சினையால் அவர் நடிக்க முடியாமல் போனது.
இதன் காரணமாக, இந்தப் படத்திற்குள் வந்திருக்கிறார் பிரதிபரங்கநாதன். இதில் எஸ் ஜே சூர்யா கீர்த்தி செட்டி ஆகியோரும் நடிக்கின்றனர். பிரதீப்புக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறாராம். இந்தப் படத்திற்கு பிறகு, ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறதாம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன பிரதீப் இயக்கத்தை மறந்து விட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.





