- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரதமர் மோடியை பற்றி விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜ் - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு -சினிமா டயலாக்குனு...

பிரதமர் மோடியை பற்றி விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜ் – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு -சினிமா டயலாக்குனு நெனைச்சு அசால்ட்டா பேசிட்டாரோ?

- Advertisement -

நடிகர் பிரகாஷ் ராஜ், தமிழ் சினிமாவில் துவக்கத்தில் வில்லன் கேரக்டர்களில் நடித்தார். பிறகு குணச்சித்திர வேடங்களிலும், இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவும் நடிக்க துவங்கினார். எப்படி நடித்தாலும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வல்லவர் என்பதால், ரசிகர்கள் அவரை வெகுவாக ரசித்தனர்.

கில்லி படத்தில், செல்லம் செல்லம் என திரிஷாவை விரட்டி விரட்டி காதலிக்கும் முத்துப்பாண்டியாக நடித்த பிரகாஷ் ராஜ், அபியும் நானும் படத்தில், மகள் திரிஷாவை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தந்தையாக மிகச்சிறந்த ஒரு நடிப்பை தந்திருந்தார். அதே போல், உன் சமையலறையில் படத்தில், சிநேகாவை முதிர்ந்த வயது பிரம்மசாரியாய் காதலித்து உருகுவார்.

- Advertisement -

தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிறமொழி படங்களிலும் பிரகாஷ்ராஜ் ஒரு சிறந்த கலைஞனாய் தன்னை வெளிப்படுத்தியவர். நல்ல ஒரு படைப்பாளி என்று பலராலும் அறியப்பட்ட பிரகாஷ் ராஜ், சமீப காலமாய் தீவிர அரசியல்வாதியாகவும் மாறிவிட்டார். கடந்தமுறை கர்நாடகா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். தொடர்ந்து அரசியல் களத்தில் பயணித்து வருகிறார்.

குறிப்பாக அரசியல் நிகழ்வுகள் குறித்து அடிக்கடி தனது கருத்துகளை, விமர்சனங்களை தெரிவித்துவரும் பிரகாஷ் ராஜ், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக அவ்வப்போது விமர்சிக்கவும் தவறுவது இல்லை. நேர்காணல் பலவற்றில் தனது கருத்துகளை ஆணித்தரமாக முன்வைக்கும் பிரகாஷ் ராஜ், மத்திய அரசின் குறைபாடுகளை, குற்றச்சாட்டுகளாக அடுக்குகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசியது, இப்போது வைரலாகி வருகிறது. அரசியல் வட்டாரத்திலும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரகாஷ் ராஜிடம், நடிகர்களாகிய நீங்களும், கமல்ஹாசனும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து விட்டீர்களே, நல்ல நடிகர்கள் தேர்தலில் ஜெயிக்க மாட்டார்களா, என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், மோடி இருக்கிறாரே, அவரை போல ஒரு சிறந்த பேச்சாளரை நான் பார்த்தது இல்லை. அவர் சிறந்த நடிகர். அவருக்கு என, பிரத்யேகமாக உடை தேர்வு பிரிவு, மேக்கப் பிரிவு, சிகை அலங்கார பிரிவு எல்லாம் உள்ளது என, கிண்டலாக கூறியுள்ளார். இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை, சிறந்த நடிகர் என பிரகாஷ் ராஜ் விமர்சித்து இருப்பது, பாஜகவினர் மற்றும் சினிமாத் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்