- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் விஜயகாந்த் மறைவு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல், தமிழ்நாடு...

கேப்டன் விஜயகாந்த் மறைவு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல், தமிழ்நாடு முழுவதும் இன்று தியேட்டர்களில் காலை காட்சிகள் ரத்து

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக முன்னனி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக இருந்தவர். ஒரு ஆண்டில் 18 படங்களில் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

தேசிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை துவக்கி, முதல் தேர்தலிலேயே அதிகமான வாக்கு சதவீதத்தை பெற்றவர். அடுத்த தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளி சட்டசபை எதிர்கட்சி தலைவராக பதவி வகித்தவர். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக இன்று காலை மண்ணுலகை விட்டு மறைந்தார்.

- Advertisement -

பாரத பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ் சினிமா உலகின் ஜாம்பவான். அவரது நடிப்பால் பல கோடி பேரின் இதயங்களை வென்றவர் விஜயகாந்த். பொதுசேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய அரசியல் தலைவர் விஜயகாந்த் என இந்திய பிரதமர் மோடி தனது தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் அறிவித்துள்ளார்.

பசி பிணியை போக்கிய மாமனிதர் விஜயகாந்த் என, விஜயகாந்த் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மாணிக்கத்தை, தங்கமான குணம் கொண்ட மனிதரை இழந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார். சிறந்த மனிதராக வாழ்ந்து காட்டியவர் விஜயகாந்த் என இயக்குநர் சேரன் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்தியில், விஜயகாந்த் என்னும் சிறந்த மனிதரின் இழப்பு, வேதனை தருகிறது. அவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தொண்டர்களுக்கு தன் ஆறுதலை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

நடிகர் விஜயகாந்த்தை மறைவை அடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில் இன்று காலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவு, தமிழ் சினிமா உலகுக்கு பேரிழப்பு. ஹீரோவுக்கும், லைட்மேனுக்கும் ஒரே விதமான உணவு என்ற முறையை கொண்டு வந்த மாமனிதர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்