- Advertisement -
Homeபொழுதுபோக்கு21 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் மறைந்த நடிகை சௌந்தர்யா- வெளிப்படையாக பேசிய நடிகை...

21 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் மறைந்த நடிகை சௌந்தர்யா- வெளிப்படையாக பேசிய நடிகை பிரியங்கா மோகன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். அவரது கொள்ளை அழகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்துக்கு பிறகு மீண்டும் எஸ்கே வுடன் டான் படத்திலும் அதன்பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் தனுஷூடன் கேப்டன் மில்லர் ரவி மோகனுடன் பிரதர் உள்ளிட்ட படங்களில் பிரியங்கா மோகன்நடித்தார். நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு பிரியங்கா நடனமாடி இருந்தார்.

- Advertisement -

அதன்பிறகு நடிகர் கவின் நடிக்கும் 9வது படத்திலும் மற்றும் மேட் இன் கொரியா படத்திலும் பிரியங்கா மோகன் இப்போது நடித்து வருகிறார். தமிழில் நான் தொடர்ந்து நடிக்காவிட்டாலும் மற்ற மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன் என்று பிரியங்கா மோகன் கூறியிருக்கிறார். ரஜினி கமல் இணையும் நெல்சன் படத்திலும் அவர் கமிட் ஆகியுள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை பிரியங்கா மோகன் கூறியதாவது, மறைந்த நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். சௌந்தர்யா சினிமாவில் நடிக்க வந்த வேகத்திலேயே ரஜினி கமல் விஜயகாந்த் கார்த்திக் போன்றவர்களுடன் நடித்தார்.

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நாகார்ஜூனா வெங்கடேஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தாா். தனது நடிப்பாலும் வசீகரத்தாலும் ஏராளமான ரசிகர்களை சௌந்தர்யா தன்வசப்படுத்தினார். அதனால் அவரது கேரக்டரில் நடிப்பதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன் என்று பிரியங்கா மோகன் அதில் கூறியிருக்கிறார்.

கடந்த 2004ம் ஆண்டு பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்காக நடிகை சௌந்தர்யா சிறிய ரக விமானத்தில் தனது சகோதரருடன் சென்ற போது விபத்தில் சிக்கி தனது 31 வயதில் உயர்ந்தார். தமிழில் ரஜினியுடன் அருணாசலம் கமலுடன் காதலா காதலா கார்த்திக்குடன் பொன்னுமணி விஜயகாந்துடன் சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் சௌந்தர்யா நடித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்