- Advertisement -
Homeபொழுதுபோக்குடூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம், அவரது கேரக்டர் என்ன தெரியுமா?...

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம், அவரது கேரக்டர் என்ன தெரியுமா? – லேட்டஸ்ட் அப்டேட் தெறிக்க விடுதே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நடிகர்களாக மாறுவது ஒன்றும் புதிதல்ல. அதிசயமான ஒரு விஷயமும் அல்ல. அப்படி பல இயக்குனர்கள் நடிகர்களாகி மாறி நடிப்பில் அசத்தியிருக்கின்றனர். அந்த வரிசையில் கே பாக்யராஜ் பாண்டியராஜன் பாரதிராஜா மணிவண்ணன் ஆர் சுந்தர்ராஜன் சேரன் பார்த்திபன் பிரதீப் ரங்கநாதன் மிஷ்கின் சுந்தர் சி என பலரை சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது அபிஷன் ஜீவிந்தும் இணைந்து விட்டார்.

ஆனால் மற்ற இயக்குனர்கள் எல்லாம் அவர்கள் இயக்கிய படங்களில் முதலில் நடித்தார்கள். பிறகு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்தார்கள். சிலர் மட்டுமே இதில் ஹீரோவாக நடித்தவர்கள். மற்றவர்கள் பெரும்பாலும் வில்லன் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்கள். ஆனால் எந்த கேரக்டர் என்றாலும் நடிகர்களாக மாறிய அவர்கள் தங்களது அழுத்தமான நடிப்பை தந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் பெரிய வெற்றியை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் சசிக்குமார் சிம்ரன் எம்எஸ் பாஸ்கர் குமரவேல் இளங்கோ ரமேஷ் திலக் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இந்த படத்தின் புதுமுக இயக்குனர் இளம் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஒரு கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு சட்டவிரோதமாக ஓடிவரும் ஒரு சிலோன் தம்பதி தன் 2 மகன்களுடன் சென்னையில் ஒரு குடியிருப்பு பகுதியில் குடியேறுகிறது. ஆரம்பத்தில் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதை மறைத்தாலும் நாளடைவில் அதை அக்கம்பக்கத்தினரிடம் கூறி விடுகின்றனர். கடைசியில் அவர்களை பிடிக்க போலீஸ் வரும்போது அந்த குடியிருப்புவாசிகளே அவர்களை காப்பாற்றுவதுதான் கதை.

- Advertisement -

இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் அடுத்த படத்தை இயக்குவார் என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில் அவரும் ஹீரோவாகி விட்டார். புதிய படம் ஒன்றில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. சென்னை எக்மோர் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில்தான் பல மாதங்களாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இது ஒரு பள்ளிக்கூடத்தை மையப்படுத்திய பள்ளி மாணவ மாணவியர் பற்றிய கதையாக உள்ளது. இந்த படத்தில் ஆசிரியர் கேரக்டரில் அபிஷன் வசந்த் படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக படத்தில் வரும் கதாநாயகியும் பள்ளி ஆசிரியைதான். ஹீரோ ஹீரோயின் இருவரும் பள்ளி ஆசிரியர்கள் என்பதால் பள்ளிக்கூடம்தான் கதைக்களம். டூரிஸ்ட் ஃபேமிலி போல இந்த படமும் ரசிகர்களின் வரவேற்பை பெறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

சற்று முன்