- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் தள்ளிப் போகிறதா, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்? - மீண்டும்...

மீண்டும் தள்ளிப் போகிறதா, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்? – மீண்டும் வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு தள்ளப்பட்ட இயக்குனர்!

- Advertisement -

இப்போது தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அமரன் மதராஸி பாரக்தி படங்களில் நடித்த நிலையில், இனி தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். நடிகர் விஜய் நடிப்பில் தி கோட் படத்தின் படப்பிடிப்பு நடந்த அந்த நேரத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிப்பது என்பது உறுதியாகி இருந்தது.

அதனால்தான் இயக்குனர் வெங்கட்பிரபு, தனது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயனை நடிகர் விஜயுடன் நடிக்க வைத்தார். அந்த காட்சியில் நடிகர் விஜய், துப்பாக்கியை பிடிங்க சிவா என்று சொன்னது, தமிழ் சினிமாவில் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு நடிகர் விஜயே விட்டுக்கொடுத்ததற்கான காட்சி அது என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

- Advertisement -

ஆனால் தி கோட் படத்துக்கு பிறகு ஒரு ஆண்டாகியும் இன்னும் வெங்கட்பிரபு எஸ்கே நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கவே இல்லை. இதற்கு முக்கிய காரணம் எதிர்பார்த்த அளவுக்கு தி கோட் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றும் கூறப்பட்டது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் ஏற்கனவே படங்களில் கமிட் ஆகியிருந்ததும் ஒரு முக்கிய காரணமாகும்.

ஏஆர் முருகதாஸில் மதராஸி மற்றும் சுதா கொங்கராவின் பராசக்தி படங்களில் கமிட் ஆகியிருந்ததால் அந்த படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் சென்றுவிட்டார். அதனால் சிவகார்த்திகேயனுக்காக கடந்த ஓராண்டாக வெங்கட்பிரபு வேறு வழியின்றி காத்திருந்தார். மதராஸி ரிலீஸான நிலையில், பராசக்தி படப்பிடிப்பும் முடிந்து விட்டது.

- Advertisement -

இப்போது தனது படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்க வெங்கட்பிரபு திட்டமிட்டிருந்த நிலையில், ஏற்கனவே கமிட் ஆன இயக்குனர் சிபி சக்ரவர்த்தி படத்தில் நடிக்குமாறு பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் சுதன் சிவகார்த்திகேயனிடம் நேரடியாக பேசியிருக்கிறார். முதலில் சிபி சக்ரவர்த்தி படத்தில் நடித்துவிட்டு தான் அதன்பின்புதான் வெங்கட்பிரபு இயக்கத்தில் எஸ்கே நடிக்க திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் பைனான்ஸ் பிரச்னை காரணமாக அந்த படம் துவங்க தாமதமாகும் என்று கூறியதால் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க வந்தார். இப்போது தனது தயாரிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் முதலில் நடிக்குமாறு சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் சுதன் நெருக்கடி தருகிறார். அதனால் அந்த படத்துக்கு பிறகுதான், வெங்கட்பிரபு படத்தில் எஸ்கே நடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஓராண்டுக்கு பின் எஸ்கே படப்பிடிப்பை துவங்க இருந்த நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு அப்செட்டில் இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்