- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு மிருக தோஷம் இருக்கு, அது தெரியாமல் எதுக்கய்யா 2 யானைகளை கொடியில் கொண்டு வந்தீங்க?...

விஜய்க்கு மிருக தோஷம் இருக்கு, அது தெரியாமல் எதுக்கய்யா 2 யானைகளை கொடியில் கொண்டு வந்தீங்க? கலாய்க்கும் நெட்டிசன்கள் – அட இந்த விஷயத்தை கட்சி நிர்வாகிகள் யோசிக்கலையா?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி 2ம் தேதி துவங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தார். நேர்மையான வெளிப்படையான ஆட்சி நிர்வாகம், மக்கள் நலனே கட்சியின் கொள்கை என்றும் அதில் தெரிவித்திருந்தார். மேலும் 2026 சட்டசபை தேர்தலே எங்களது இலக்கு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு முதலில் மதுரையில் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. பிறகு திருச்சியில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. பிறகு பல இடங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டும், ஆளுங்கட்சி திமுக இடையூறுகளால் மாநாடு நடத்த இடம் முடிவாகவில்லை.

- Advertisement -

ஆனால் இப்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாடு சார்ந்த ஆயத்தப் பணிகள் துவங்கி விட்டதாகவும் செப்டம்பர் 22ம் தேதி மாநாடு என்றும் கூறப்படுகிறது. ஆனால் கட்சியின் தலைவர் விஜய் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இதற்கிடையே இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கட்சிக்கொடி அறிமுகம், கொடியேற்று விழா, உறுதிமொழி ஏற்பு, கட்சி பாடல் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள், பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை செயல் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் நடிகர் விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி, அங்கிருந்த கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார்.

- Advertisement -

இந்த கொடியில் மேலும் கீழும் அடர்சிவப்பு மஞ்சள் நிறங்களும், நடுவில் வாகைப்பூ, அதன் இருபுறமும் முன்னங்கால்களை தூக்கிய யானை உருவ படங்களும் இடம்பெற்ற நிலையில் கட்சிக்கொடி வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் யானை சின்னம் உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைப்படி தவெக கட்சிக் கொடியில் யானை உருவங்கள் இடம்பெற்றது விதிமீறலாக தெரிகிறது.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சி, கொடியில் உள்ள யானைகள் படத்தை உடனடியாக நீக்காவிட்டால் சட்டப்படி இதை சந்திப்போம் என அறிவித்துள்ளது. இது கட்சிக்குள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்த நெட்டிசன்கள், ஏற்கனவே தளபதி விஜய்க்கு சுறா, புலி, பீஸ்ட், லியோன்னு மிருக தோஷம் இருக்கு. இந்த நிலமையில், கட்சிக்கொடியில் 2 யானைகள் படத்தை போட்டால், வில்லங்கம்தான் வரும் என்று கலாய்த்து வருகின்றனர். சுறா, புலி, பீஸ்ட், லியோ படங்கள் விஜய் நடிப்பில் வெளியான தோல்வி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்