எந்த திரைப்படம் வெளிவந்தாலும் ப்ளூ சட்டை மாறனின் ரிவ்யூவைதான் பலரும் தேடிச் சென்று பார்ப்பார்கள். அவர் அந்தளவுக்கு மிகச் சிறப்பான விமர்சகர் என்ற நோக்கத்தில் எல்லாம் இல்லை, அவர் ஒரு படத்தை திட்டத் தொடங்கினால் மிகவும் சர்ச்சையாவது உண்டு. இவ்வாறு சர்ச்சைக்கு பெயர் போன சினிமா விமர்கராகவே டிரெண்டு ஆனவர் அவர்.

சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தை கூட தனது பாணியில் மிகவும் நக்கலாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.
அப்போது நிருபர் அவரிடம், “ஜெயிலர் படத்தை மக்கள் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால் ப்ளூ சட்டை மாறன் பயங்கரமாக விமர்சனம் செய்திருக்கிறாரே?” என்று ஒரு கேள்வியை கேட்டார்.
அந்த கேள்வியை கேட்டதும் கடுப்பான கே.ராஜன், “நல்லதை பேசும்போது, ஏன் ஒரு கெட்டத்தை பேசுகிறீர்கள். உலகத்தில் உள்ள அனைவருமே நல்லவர்கள் இல்லை. பொறாமை பிடித்தவர்கள், கெட்டவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர் பேசியது அவரது பொறாமைப்பட்ட மனதா அல்லது ரஜினிகாந்த் மீதான தனி வெறுப்பா? என்று நம்மால் சொல்ல முடியாது.

எப்போதுமே விமர்சனம் செய்வதை தப்பு தப்பாகத்தான் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஒரு படம் பார்த்தால் முதலில் அதனுடைய நிறைகளை எழுத வேண்டும். அதன் பிறகுதான் குறைகளை எழுத வேண்டும். குறைகளை மட்டுமே பார்த்தால் அவன் குறைவுள்ள மனிதன்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “பல தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் தவறாக பேசி தப்பான ஒரு விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்கிறார். இது தவறான ஒரு செயல். இவ்வளவு பேசுகிறாரே, அவர் இயக்கிய ஆண்டி இந்தியன் திரைப்படம் ஒரு நாள் கூட ஓடவில்லை. அப்படி என்றால் அடுத்தவர்களை குறை சொல்ல உனக்கென்ன தகுதி இருக்கிறது?” என்று கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





