- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படத்தில் அதிரடி மாற்றம் - தயாரிப்பாளர் கமல்ஹாசன் எடுத்த...

சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படத்தில் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர் கமல்ஹாசன் எடுத்த திடீர் முடிவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களை அவர் தயாரித்துள்ளார். இதில் அவர் நடித்த படங்கள் மட்டுமின்றி மற்ற ஹீரோக்களின் படங்களும் இருக்கின்றன.

அந்த வகையில் சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு மாதவன் நடித்த நளதமயந்தி சிவகார்த்திகேயன் நடித்த அமரன் போன்ற படங்களின் தயாரிப்பாளர் நடிகர் கமல்ஹாசன்தான். இப்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன், சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படங்களின் தயாரிப்பாளரும் கமல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் தாய்கிழவி படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் படம் உருவாகி வருகிறது. தேனி மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளில் சேயோன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

இதற்கிடையே சேயோன் படத்தின் சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் கமிட் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை விலக்கி விட்டு தயாரிப்பாளர் கமல்ஹாசன் இந்த படத்தின் சண்டை பயிற்சியாளர்களாக அன்பறிவ் மாஸ்டர்களை கமிட் செய்திருக்கிறார். இவர்கள் கமல் நடிக்கும் 237வது படத்தை இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சேயோன் கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் படம் என்றாலும் கூட படத்தில் வரும் சண்டை காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்பதால் சூப்பர் சுந்தருக்கு பதிலாக அன்பறிவ் மாஸ்டரை கமல்ஹாசன் மாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கேமராமேன் அதாவது ஒளிப்பதிவாளரும் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கமல்ஹாசனை பொருத்த வரை தனது சினிமாவில் எதையும் பெஸ்ட் ஆக தர வேண்டும் என்பதில் அதிகளவில் மெனக்கெடுபவர். அது அவர் நடிக்கும் படமாக இருந்தாலும் அவர் தயாரிக்கும் படமாகவும் இருந்தாலும் அதில் 100 சதவீதம் திருப்தியை அவருக்கு தந்தாக வேண்டும். அந்த வகையில் சேயோன் படத்தில் இந்த அதிரடி மாற்றங்களை தயாரிப்பாளர் கமல்ஹாசன் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்