மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகை நித்யா மேனன். பிகில் சைக்கோ மாலினி 22 பாளையங்கோட்டை ஓ காதல் கண்மணி திருச்சிற்றம்பலம் தலைவன் தலைவி உள்ளிட்ட பல படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.
சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படத்தில் நாயகனாக விஜய் சேதுபதியும் நாயகியாக நித்யா மேனனும் நடித்திருந்தனர். இந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. ஆனால் இந்த படம் பார்த்த பலரும், இதெல்லாம் ஒரு படமா என்றுதான் கடுமையாக விமர்சித்தனர்.
அதுமட்டுமின்றி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான தலைவன் தலைவி படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள், படம் முழுக்க விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் கத்திக்கிட்டே இருக்காங்க. பிரியாணி அண்டாவும் குருமா குண்டானும் நடிச்ச இந்த படத்தையா ஆஹா ஓஹோன்னு சொன்னீங்க, தலைவன் தலைவி என்பதற்கு பதிலாக தலைவலி என டைட்டில் வைத்திருக்கலாம் என்றும் கமெண்ட் செய்திருந்தனர்.
இப்போது நடிகர் தனுஷ் நடித்து இயக்கி உள்ள இட்லி கடை படத்திலும் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் குண்டாக இருப்பதால் பரோட்டா கடை ஓனராகவும் இட்லி கடை ஓனராகவும் படத்தில் நடிக்க வைக்கிறார்களே என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கலாய்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவரது குண்டான உடல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்வதும்தான் உண்மைதான்.
சமீபத்தில் நடிகை நித்யா மேனன், புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காக கமிட் செய்யப்பட்டு இருக்கிறார். அப்போது அந்த படத்தின் இயக்குனர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதற்கு நடிகை நித்யா மேனன் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
நான் குண்டாக இருந்தால் தான் அழகாக இருப்பேன். எடையை குறைத்தால் என் அழகும் குறைந்து போகும். அதோடு என் தோற்றத்தை பலர் விமர்சித்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் இந்த அழகைத்தான் வர்ணிக்கின்றனர். அதனால் நான் உடல் எடையை குறைக்க மாட்டேன். இதே குண்டான தோற்றத்தில் தான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார். வேறு வழியின்றி இயக்குனரும் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு அந்த படத்தில் நடிக்க நித்யா மேனனை கமிட் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.





