- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் இருக்கிறேன்... உறுதிப்படுத்திய பிரபலம்... கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்...

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் இருக்கிறேன்… உறுதிப்படுத்திய பிரபலம்… கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்…

- Advertisement -

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. தர்பார் அண்ணாத்த திரைப்படங்களின் தோல்வியால் துவண்டு கிடந்த ரஜினிகாந்திற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய எனர்ஜியை கொடுத்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த ஜெயிலர், 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்தது.

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மிக முக்கியமாக கன்னட திரை உலகில் இருந்து சிவராஜ்குமார், மலையாளத்திலிருந்து மோகன்லால் உள்ளிட்டோரும் இடம் பெற்றார்கள். இதுபோக தமன்னாவும் காவாலா பாடலுக்கு நடனம் ஆடினார்.

- Advertisement -

இந்த படத்தின் இமாலய வெற்றிக்கு அந்த பாடல் முக்கிய காரணம் என்று கூறலாம். அந்த அளவுக்கு அது ரசிகர்களை கவர்ந்தது. இணையத்திலும் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. ஜெயிலரின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த, சன் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு காரை பரிசாக அளித்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து லால்சலாம் மற்றும் வேட்டையன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தார் ரஜினிகாந்த். இதில் லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படியான சூழலில் தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

- Advertisement -

இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் ரஜினி. இதன் படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக அண்மையில் கோயம்புத்தூர் சென்று இருந்தார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் தான் இருப்பதாக கூறியிருக்கிறார் கன்னட நடிகர் சிவராஜ்குமார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், எனக்கான போர்சன் விரைவில் தொடங்க இருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகத்தில் எனக்கு மிகச் சிறிய ரோல் தான் கிடைத்தது. ஆனால் அது இத்தனை அளவுக்கு அன்பை பெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் சிகரெட்டை புகைத்தவாறு வெறும் டிஷ்யூ பாக்ஸ் மட்டும்தான் எடுத்துச் சென்றேன் என்று கூறியிருக்கிறார். படத்தில் பாலையா இடம்பெறுவதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது பற்றி எனக்கு தெரியாது ஆனால் அவர் இடம் பெற்றிருந்தால் அவருடன் நடிப்பது எனக்கு சந்தோஷம் என்று சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்