- Advertisement -
Homeபொழுதுபோக்குமதுரை மத்திய தொகுதியில் நான் வெற்றி பெற்றால் இதெல்லாம் நடக்கும் - லிஸ்ட் போட்ட அதிமுக...

மதுரை மத்திய தொகுதியில் நான் வெற்றி பெற்றால் இதெல்லாம் நடக்கும் – லிஸ்ட் போட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் இயக்குனர் சுந்தர் சி!

- Advertisement -

நடிகை குஷ்பூ ஏற்கனவே அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக உள்ள நிலையில் இப்போது அவரது கணவர் இயக்குனர் சுந்தர் சியும் அரசியல் களத்தில் இறங்கி விட்டார். மதுரை மத்திய தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக, இயக்குனர் சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். இவர் எதிர்த்து நிற்பது திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் சுந்தர் சி கூறியதாவது, மதுரை மத்திய பகுதியில் உள்ள எந்த சந்து வீதிகளிலும் மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை. லைட் எரியவில்லை. அப்புறம் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க முடியும்?

- Advertisement -

அப்புறம் கஞ்சா புழக்கமும் இங்கு அதிகமாக இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும். நான் எல்லாவற்றுக்கும் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். ஆண்டவன் புண்ணியத்தில் மதுரை மத்திய தொகுதி மக்கள் ஆசிர்வாதத்தால் நான் வெற்றி பெற்றால் வெற்றி பெற்ற 3 மாதங்களில் இதை நான் செய்து கொடுப்பேன்.

மதுரை மத்திய தொகுதியில் இருக்கிற சின்ன சந்துகள் முதல் பெரிய தெருக்கள் வரை அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் பொருத்தப்படும். எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். 24 மணி நேரமும் ஒவ்வொரு பகுதியும் சுழற்சி முறையில் காவல் துறை கண்காணிப்பில் இருக்கும்.

- Advertisement -

அப்படி இருக்கும் போது பெண்களுக்கு எதிரான எந்த வன்கொடுமை பெண்களுக்கு எதிரான எந்த அநீதியும் நடக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். இந்த மாதிரியான அடிப்படை விஷயங்களை கூட இந்த தொகுதி எம்எல்ஏ பண்ணாமல் இருக்கிறார்.

பர்சனல் இமேஜ் எல்லாம் இப்போது கிழிந்து போய் விட்டது. என்னை பற்றி திமுக வேட்பாளர் பேசிய பேச்சை பார்த்தால் எல்லோருக்கும் அது தெரியும். அவர் ஏக வசனத்தில் பேசறது எல்லோருக்கும் தெரியும். அந்த இமேஜை வெச்சுக்கிட்டு எதுவும் பண்ண முடியாது. மக்கள் இமேஜை பார்க்கறது இல்லை. மக்களுக்கு என்ன நல்லது பண்றாங்கன்னு தான் பார்க்கறாங்க என்று சுந்தர் சி பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்