- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது வெற்று திராவிட மாடல் அரசா? எல்லோரிடமும் சாரி மா கேட்கும் அரசா? - கண்டன...

இது வெற்று திராவிட மாடல் அரசா? எல்லோரிடமும் சாரி மா கேட்கும் அரசா? – கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசிய தவெக தலைவர் விஜய்!

- Advertisement -

சமீபத்தில் திருப்புவனத்தை அடுத்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது கடுமையான தாக்குதலால் உயிரிழந்தார். கோவிலுக்கு வந்த பெண் சிவகாமி என்பவர், காரில் வைத்திருந்த நகை காணாமல் போனதாக திருப்புவனம் போலீசில் புகார் அளித்த நிலையில், கோவில் காவலாளி அஜித்குமாரை, விசாரணை என்ற பெயரில் போலீசார் அடித்து கொன்றுவிட்டதாக தெரிகிறது.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், போலீசார் தாக்குதலில் உயிரிழந்த கோவில் காவலாளி அஜித்குமார் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். ரூ. 2 லட்சம் நிவாரணமும் வழங்கினார்.

- Advertisement -

தொடர்ந்து இந்த கொலை சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக கட்சியினர் திரளாக பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது, அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் சாரி கேட்டது தப்பில்லை. ஆனால் உங்கள் ஆட்சியில் போலீஸ் விசாரணையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த 24 பேரின் குடும்பத்தினரிடமும் நீங்கள் சாரி சொன்னீர்களா?

- Advertisement -

பல்கலை விவகாரம் முதல் அஜித்குமார் கொலை வழக்கு வரையில் நீதிமன்றம் தலையிட்டு உங்கள் அரசை கேள்வி கேட்கிறது. நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்க வேண்டும் என்றால் நீங்கள் எதற்கு? உங்கள் ஆட்சி எதற்கு? உங்களின் முதல்வர் பதவி எதற்கு? எந்த கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை. இருந்தால் தானே பதில் வரும். சாரிமா என்ற பதில் மட்டும் தான் உங்களிடம் இருந்து வரும். தெரியாமல் நடந்துருச்சுமா, நடக்கக்கூடாது நடந்துச்சுமா. அவ்வளவுதான்.

வெற்று விளம்பர மாடல் ஆன திமுக சர்க்கார், இப்போது சாரிமா மாடல் சர்க்காராக மாறிவிட்டது. இதற்கு எல்லாம் பரிகாரமாக நீங்கள் ஆட்சியை விட்டு செல்லும் முன்பு, சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும். இல்லை எனில் சரி செய்ய வைப்போம். அதற்கான அனைத்து போராட்டங்களும் தவெக சார்பில் நடத்தப்படும் என்று நடிகர் விஜய் ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்