- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 படம் விவகாரத்தில் தொடரும் சர்ச்சைகள், விரக்தியின் எல்லைக்கே சென்ற இயக்குனர் சுகுமாறன் -...

புஷ்பா 2 படம் விவகாரத்தில் தொடரும் சர்ச்சைகள், விரக்தியின் எல்லைக்கே சென்ற இயக்குனர் சுகுமாறன் – சினிமாவை விட்டு விலகுவதாக பகிரங்க அறிவிப்பு!

- Advertisement -

சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படம் 1500 கோடி ரூபாய் வசூலை கடந்து சக்கைப்போடு போட்டு வருகிறது. இயக்குனர் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நாயகனாக நடித்த இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா பகத் பாசில் சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். புஷ்பா முதல் பாகத்தை விட 2ம் பாகம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முந்தைய நாள், ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 பிரிமியர் ஷோ நடந்தது. அதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகனும் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

- Advertisement -

இந்த சம்பவத்தை அடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் அல்லு அர்ஜூனும், தயாரிப்பாளர் சார்பில் ரூ. 50 லட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பிரிமியர் ஷோவுக்கு போலீஸ் அனுமதி மறுத்தும் அங்கு வந்த நடிகர் அல்லு அர்ஜூன்தான் காரணம், அவர் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால்தான் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார் என்ற அடிப்படையில் ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியேட்டர் உரிமையாளர், மேலாளர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்தனர்.

ஒருநாள் சிறையில் இருந்த அல்லு அர்ஜூன் இப்போது ஜாமினில் வெளியில் இருக்கிறார். அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் தெலங்கானா அரசு, அதிக கோபத்தில் உள்ளது. நேற்று அல்லு அர்ஜூனை போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பெண் உயிரிழந்த விவகாரத்தில் அப்போது அல்லு அர்ஜூனுடன் வந்த ஸ்பான்சர் ஆண்டனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

- Advertisement -

இந்த சூழலில் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புஷ்பா 2 பட இயக்குனர் சுகுமாறனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் எதை கைவிட விரும்புகிறீர்கள் என்று ஒரு கேள்வி எழுப்பிய நிலையில், அவர் ஒரே வார்த்தையில் சினிமா என்று கூறியிருக்கிறார். அப்போது அருகில் இருந்த நடிகர் ராம்சரண், நீங்கள் எப்போதும் சினிமாவை விட்டுப் போகக் கூடாது என்று கூறினார்.

எனினும் புஷ்பா 2 படம் ரிலீஸாகி பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் பெண் உயிரிழந்த சம்பவமும், அதுதொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் சந்தித்து வரும் பிரச்னைகளும், தெலங்கானா அரசு இனி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருப்பதும் என பல விஷயங்களால் விரக்தியடைந்த இயக்குனர் சுகுமாறன், சினிமாவை விட்டு விலக அறிவித்திருப்பதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்