- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு நேரம் தெரியுமா? வெளியான அதிகாரபூர்வ தகவல் -...

புஷ்பா 2 படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு நேரம் தெரியுமா? வெளியான அதிகாரபூர்வ தகவல் – அல்லு அர்ஜூன் சாதிப்பாரா, சோதிப்பாரான்னு தெரியலையே…

- Advertisement -

கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா பகத் பாசில் சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். சுகுமாரன் இயக்கிய இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். செம்மர கடத்தலை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.

முதல் பாகமாக வெளியான புஷ்பா படத்தை தொடர்ந்து, புஷ்பா 2ம் பாகம் உருவானது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி புஷ்பா 2 வெளியாகும் என அறிவித்த நிலையில், படப்பிடிப்பை முடிக்க தாமதம் ஏற்பட்டதால் டிசம்பர் 6ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது, பிறகு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வருகிற 17ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

புஷ்பா 2 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகரித்துள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் அதிகளவில் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை மும்பை கொல்கத்தா கேரளா உள்ளிட்ட 7 முக்கிய நகரங்களில் புஷ்பா 2 படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படத்தின் இயக்குனர் சுகுமாரன், ஹீரோ அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்த படம் 3 மணி நேரம் 10 நிமிடம் திரையில் ஓடும் என்று கூறப்படுகிறது. ஆனால் 2.5 மணி நேரத்துக்குள் மட்டுமே வழக்கமாக படங்கள் உள்ள நிலையில், இப்படி 3 மணி நேரத்துக்கு மேல் படத்தின் நீளம் நீடித்தால் ரசிகர்கள் சலிப்படைவார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

படத்தின் ரன்னிங் டைமை குறைந்தபட்சம் 2.5 மணி நேரமாக குறைத்து விடுங்கள் என்று படக்குழுவினருக்கு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். 3 மணி நேரத்துக்கு மேல் ஓடும் புஷ்பா 2 படத்தில், தேவையற்ற 40 நிமிடம் காட்சிகளை குறைத்து பிறகு படத்தை வெளியிடுங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு படத்தின் இயக்குனர் சுகுமாரன் சம்மதிக்கவில்லை.

புஷ்பா 2 படம் விறுவிறுப்பான கமர்ஷியல் கதையில் உருவாகி இருப்பதால் இந்த படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நேரம் போவதே தெரியாது. அதனால் ரசிகர்கள் நேரத்தை மனதில் வைக்காமல், படத்தின் கதையோடு ஒன்றி பார்ப்பதால் 3 மணி நேரம் என்பது அவர்களுக்கு வெகுசுலபமாக போய்விடும் என்று படத்தின் இயக்குனர் சுகுமாரன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்