- Advertisement -
Homeபொழுதுபோக்குரிலீஸ் ஆன 2 வாரங்களில் ரூ. 1450 கோடிகளை கடந்த புஷ்பா 2 - ஐந்து...

ரிலீஸ் ஆன 2 வாரங்களில் ரூ. 1450 கோடிகளை கடந்த புஷ்பா 2 – ஐந்து மொழிகளில் வெளியாகிறது, ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா 2 படம் கடந்த 5ம் தேதி வெளியானது. ராஷ்மிகா மந்தனா சுனில் பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் முதல் நாளிலேயே 275 கோடி ரூபாய் வசூலை கடந்தது. படம் வெளியான 7 நாட்களில் 1006 கோடி ரூபாய் வசூலை கடந்தது. இப்போது 2 வாரங்களில் ரூ. 1450 கோடியை வசூலித்துள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடங்களுக்கு மட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணியை இசையை, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடும் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

புஷ்பா முதல் பாகத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டது போல, புஷ்பா 2 படத்தில் நடிகை ஸ்ரீ லீலா குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். அந்த பாடலை போலவே, இந்த பாடலும் பெரிய அளவில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் டிரண்டிங் ஆகியுள்ளது.

மசாலாத்தனங்கள் நிறைந்த ஒரு ஆக்சன் படமாக புஷ்பா 2 இருந்தாலும், ஹீரோயிசத்தை மட்டுமே மையப்படுத்திய ஒரு கதையாக இருந்தாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமான திரைக்கதை, இயக்கம், நாயகன் காட்டும் மாஸ் நடிப்பு போன்றவையே புஷ்பா 2 படத்தின் மெகா பஸ்டர் வெற்றிக்கு காரணமாக உள்ளது.

- Advertisement -

புஷ்பா 2 படத்தை தொடர்ந்து புஷ்பா 3 படம் அடுத்து வருவதற்கான லீடும் இந்த படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் படம் ஓடினாலும் திரைக்கதையிலும், கதை ஓட்டத்திலும் தொய்வு இல்லாததால், ரசிகர்களுக்கு படத்தின் நீளம் அதிகமாக இருப்பது பெரிய பாதிப்பை தரவில்லை.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகிற ஜனவரி மாதம் 9ம் தேதி, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புஷ்பா 2 வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் ஒரே நேரத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை ரிலீஸ் படங்களுடன் ஓடிடியில் வெளியாகும் புஷ்பா 2 படத்தையும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

- Advertisement -

சற்று முன்