- Advertisement -
Homeபொழுதுபோக்குசீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்? உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் போட்டியாளர் - அட...

சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்? உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் போட்டியாளர் – அட இப்ப எஸ்கே லெவலே வேற ப்ரோ…

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய்டிவியில் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர். தொடர்ந்து அது இது எது என்ற காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். தொடர்ந்து பல சினிமா பிரபலங்களை நேரில் பேட்டி கண்டார். அதன்பிறகு சினிமா விருது வழங்கும் விழாக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதேபோல் விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி போன்ற டிவி சேனல்களில் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் தீபக். இவர் மக்கள் மனம் கவர்ந்த நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பெரிய அளவில் தீபக் பிரபலமானார்.

- Advertisement -

மேலும், தீபக் இவனுக்கு தண்ணீல கண்டம் என்ற காமெடி படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் 8வது சீசனில் போட்டியாகவும் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வருகிறார். கடந்த அக்டோபர் 6ம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 50வது நாளை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் சீரியல் நடிகர் தீபக், நீண்ட நாட்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு பேட்டியில் கூறியது தற்போது வைரலாகி வருகிறது. அதில் தீபக் கூறியதாவது, நான் சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோது என்னிடம் சிவகார்த்திகேயன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டார். ஆனால் நான் அதை மறுத்து விட்டேன்.

- Advertisement -

உனக்கு சீரியல் எல்லாம் செட் ஆகாது. நீ படத்தில் நடிக்கும் முயற்சியை மட்டும் செய். படத்தில் மட்டும் நடி என்று கூறினேன். அந்த காலகட்டத்தில் சீரியல்களில் நடித்தால் படங்களில் நடிக்க முடியாது, வாய்ப்பு கிடைக்காது. அதனால் தான் அவர் சினிமாவில் நடிக்கட்டும் என்று நான் கூறினேன்.

அதன்பிறகு ஒரு நிகழ்ச்சியில் நானும் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டோம். அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், இதுகுறித்து பேசும்போதுதான் நான் அவரிடம் அவ்வாறு கூறியதே எனக்கு நினைவுக்கு வந்தது. அப்போது சிவா என்னிடம் நன்றியும் தெரிவித்தார் என்று தீபக் கூறியிருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் சீரியல் வாய்ப்பு கேட்ட அவர், இப்போது அமரன் படம் தந்த அபார வெற்றி மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் டாப் லெவல் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்