நடிகர் அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். இயக்குநர் சுகுமாறன் இயக்கத்தில், கடந்த 2022ம் ஆண்டில் வெளிவந்த படம் புஷ்பா. இந்த படத்தில் செம்மரக்கட்டைகளை கடத்தும் லாரி டிரைவராக அல்லு அர்ஜூன் நடித்திருப்பார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் மூவியாக மிகப்பெரிய வசூலை குவித்தது.
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங், கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. ஒரு தரப்பில் இந்த ஆண்டின் கடைசியில்தான் புஷ்பா 2 வெளியாகும் என்ற தகவலும் இருந்து வருகிறது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து வெளியான தகவல் வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி தான்.
புஷ்பா படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். அந்த படத்தில் ஊ சொல்றியா மாமா, குத்து பாட்டுக்கு நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்த 2ம் பாகத்தில் நடிகை திஷா பதானி கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பகத் பாசில், பிரியாமணி இந்த படத்தில் நடித்துள்ளனர். பகத் பாசில் முதல் பாகத்திலும், மொட்டை தலையுடன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் கடந்தாண்டில் வெளியானது. இதில் புஷ்பா வில்லன்களால் கொல்லப்பட்டு இறந்து விடுவது போலவும், அடுத்து அவர் இறக்கவில்லை, உயிருடன்தான் இருக்கிறார் என்பது போலவும் போட்டோஸ், வீடியோ வெளியாகி மக்கள் சந்தோஷத்தில் கொண்டாடுவது போலவும் டிரெய்லரில் காட்சிகள் வெளியாகின. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
புஷ்பா 2 படத்துக்கு பிறகு, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டைரக்டர் அட்லி டைரக்ட் செய்கிறார் என்பதும் உறுதியாகி விட்டது. புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதனால் ஆகஸ்ட் 25ல், புஷ்பா 2 வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் பெர்லின் திரைப்பட விழாவில் புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜூன் கலந்துக்கொண்டார். அப்போது விழா மேடையில் பேசிய அவர், புஷ்பா படத்தின் 3ம் பாகமும் உருவாக உள்ளதாக கூறினார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில், அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ள இந்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், கிழிஞ்சது என்ற ஒரே வார்த்தையில் பதில் தந்திருக்கிறார். 2ம் பாகமே வராத நிலையில், 3ம் பாகம் குறித்து அல்லு அர்ஜூன் பேசியதற்கு இப்படி ஒரு பதிலடி தந்திருக்கிறார் ப்ளு சட்டை மாறன்.





