நயன்தாரா தொடக்கத்தில் தனது சொந்த மாநிலமான கேரளா மாநிலத்தில் ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது கெரியரை தொடங்கினார். அந்த சமயத்திலேயே பல மலையாளத் திரைப்படங்களில் நடித்தார் நயன்தாரா. அதனிடையே ஹரி இயக்கத்தில் “ஐயா” திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது.
“ஐயா” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் பாடலின் மூலம் தமிழ் இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்தார் நயன்தாரா. தமிழில் அறிமுகமான சமயத்தில் இரண்டாவது திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின் நயன்தாரா தென்னிந்தியாவின் பிசியான நடிகையாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் டாப் நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கிய நயன்தாரா, தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.
எனினும் அஜித் போலவே சமீப காலமாக தனது திரைப்படங்களின் புரொமோஷன்களுக்கு நயன்தாராவும் வருவதில்லை. ஆனால் அவர் தயாரிக்கும் திரைப்படத்திற்கு மட்டும் பல புரொமோஷன் பணிகளில் ஈடுபடுகிறார் நயன்தாரா. இது அவர் மீது பலவேறு விமர்சனங்களை எழுப்பியது.
“அவர் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு மட்டுமே புரோமோஷன் செய்கிறார், ஆனால் மற்றவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் நடித்தால் மட்டும் அவர் புரொமோஷனுக்கு வர மறுக்கிறார்” என பேச்சுக்கள் அடிப்பட்டன.
இந்த நிலையில் நயன்தாரா, ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இது நயன்தாரா நடித்த முதல் பாலிவுட் திரைப்படமாகும். “ஜவான்” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளிவர உள்ளது.
இதனை தொடர்ந்து இன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் “ஜவான்” திரைப்படத்தின் Pre Release Event நடைபெறுகிறது. இதில் ஷாருக்கான் கலந்துகொள்கிறார். ஆனால் இதில் நயன்தாரா கலந்துகொள்வாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஒரு சிலர் நயன்தாரா தான் தயாரிக்கும் திரைப்படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டுந்தான் கலந்துகொள்வார் எனவும் நிச்சயம் “ஜவான்” திரைப்படத்தின் விழாவில் கலந்துகொள்ள மாட்டார் எனவும் கூறுகின்றனர். எனினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





