- Advertisement -
Homeபொழுதுபோக்குதுபாயில் நடக்க வேண்டிய ராக்கா படப்பிடிப்பை திடீரென ஐதராபாத்துக்கு மாற்றிய இயக்குனர் அட்லி - அதுதான்...

துபாயில் நடக்க வேண்டிய ராக்கா படப்பிடிப்பை திடீரென ஐதராபாத்துக்கு மாற்றிய இயக்குனர் அட்லி – அதுதான் காரணமா?

- Advertisement -

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ராக்கா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்குகளில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்க உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ஒரு பிரம்மாண்டமான சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளது. ராக்கா படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்த நிலையில் இப்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இந்த படத்தின் சில முக்கிய காட்சிகளை துபாயில் படமாக்க வேண்டும் என்று டைரக்டர் அட்லி திட்டமிட்டார். ஆனால் மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் போர் பதட்டம் காரணமாக அவர் அந்த திட்டத்தை கைவிட்டுள்ளார். அந்த காட்சிகளையும் ஐதராபாத்தில் அவர் படமாக்க உள்ளார்.

சற்று முன்