நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஏஸ். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தில் போல்ட் கண்ணன் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். ருக்மணி வசந்த் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படமாக இருந்தும் ரசிகர்களை இந்த படம் திருப்தி செய்யவில்லை.
இந்த படத்தில் விஜய் சேதுபதி யோகிபாபு நடித்துள்ள சில காமெடி காட்சிகள் மட்டுமே சற்று ரசிக்கும்படியாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். மற்றபடி இந்த படம் இதுவரைக்கும் 6.9 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு மோசமான வசூல் காரணமாக தியேட்டர் உரிமையாளர்கள் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏனெனில் கடந்தாண்டில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா பெரிய அளவில் வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரி குவித்தது. சீனாவில் மட்டுமே மகாராஜா படம் ரூ. 90 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆனால் ஏஸ் படம் 7 கோடி ரூபாய் கூட வசூலிக்காமல் முடங்கிப் போய்விட்டது.
இந்த சூழலில் தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கும் ஒரு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தை நடிகை சார்மி தயாரிக்க உள்ளார். பான் இந்தியா படமாக இந்த படத்தில் நடிகை தபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆனால் படத்தின் கதாநாயகி அவரல்ல, நடிகை ராதிகா ஆப்தே என்று தகவல் வெளியானது.
தமிழில் கபாலி படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடிகர் கார்த்திக்கு பிளாஷ்பேக்கில் காதலியாக வருவார். அவர்தான் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதிகா ஆப்தே இதை முற்றிலும் மறுத்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகை ராதிகா ஆப்தேவிடம் கேட்ட போது, அய்யோ கடவுளே இந்த செய்தி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இந்த படத்தில் நடிக்கவில்லை. இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என்று பதில் கூறியிருக்கிறார். சம்பந்தப்பட்ட நடிகைக்கே தெரியாமல் எப்படி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடிப்பதாக தகவல் பரவியது என்றுதான் இப்போது ரசிகர்கள் குழப்பத்தில் தலை சுற்றிப்போய் உள்ளனர். அந்த நடிகைக்கும் இப்படிதான் கேட்டவுடன் தலை சுற்றியிருக்கும் என்று பலர் கலாய்த்துள்ளனர்.





