நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனுக்கு, ஜெயிலர் படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. இதையடுத்து ஜெயிலர் 2 படத்தை இயக்க அவர் கமிட் செய்யப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம், அதற்காக பெரிய தொகை ஒன்றை, நெல்சனுக்கு தந்துவிட்டதாக தகவல் உள்ளது.
இப்போது ரஜினிகாந்த், தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி 170 படத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்துக்கு பெயர் வைக்கவில்லை. கடந்த வாரத்தில், மும்பை சென்று, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் நடிக்க வேண்டிய காட்சிகளை எடுத்துவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது.
இனி தீபாவளி பண்டிகைக்கு பின்பு, அடுத்தக்கட்ட ஷூட்டிங் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் ரஜினி 171 படத்தை, லியோ பட டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் துவக்கத்திலோ இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
விக்ரம் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ, பெரிய வெற்றியை பெற்று, வசூலில் 540 கோடி ரூபாயை கடந்துள்ளது. ஆனால் விமர்சன ரீதியாக இந்த படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை. குறிப்பாக படத்தின் பின்பகுதியில் இடம்பெற்ற காட்சிகள், ரசிகர்கைள பலத்த அதிருப்தியடைய செய்தது.
அதனால், ரஜினி 171 படத்தை தரமான சம்பவமாக, வேற லெவலில் கொண்டுவர வேண்டும் என, லோகேஷ் திட்டமிட்டு அதற்கேற்ப நடிகர், நடிகைகள், கதாபாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார். அதில் மிக முக்கியமான வில்லன் கேரக்டர் இவருக்கு வழங்கப்பட இருப்பதாக, தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது ரஜினி 171 படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் மாஸ்டரை, லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்திருக்கிறார். விக்ரம் படத்தில், விஜய் சேதுபதிக்கு பதிலாக, இவரையே நடிக்க வைக்க லோகேஷ் நினைத்திருக்கிறார். ஆனால், கால்ஷீட் இல்லாததால் ராகவா லாரன்ஸ்க்கு பதிலாக, விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அதனால், ரஜினியின் தீவிர ரசிகரை, அவருக்கு வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் லோகேஷ். இது, ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.





