- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த பேய் படத்தில் முதலில் சூப்பர் ஸ்டார்தான் நடிப்பதாக இருந்தது... இதுவரை வெளிவராத தகவலை பகிர்ந்த...

இந்த பேய் படத்தில் முதலில் சூப்பர் ஸ்டார்தான் நடிப்பதாக இருந்தது… இதுவரை வெளிவராத தகவலை பகிர்ந்த ராகவா லாரன்ஸ்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்தமாக பேய் படங்களை குத்தகைக்கு வாங்கி எடுத்திருப்பவர் ராகவா லாரன்ஸ் தான் என்று இணையத்தில் இன்றளவும் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். இதற்குக் காரணம் அவர் தொடர்ந்து எடுத்து வந்த காஞ்சனா பட சீரிஸ்தான். ஆரம்பத்தில் தனது எடுப்பான நடனத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார் ராகவா லாரன்ஸ்.

அங்கிருந்து சில பாடல்களுக்கு நடனமாடி அசத்திய அவர், நடன இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிறகு இயக்கத்தின் மீது உள்ள நாட்டத்தால் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்த ராகவா லாரன்ஸ், தெலுங்கில் நாகர்ஜுனாவை வைத்து ஒரு படத்தை எடுத்தார். தமிழிலும் ராஜாதி ராஜா, பாண்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த அவர், முனி திரைப்படத்தை இயக்கி வெற்றியை இயக்குனராக உருவெடுத்தார்.

- Advertisement -

ராகவா லாரன்ஸ்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது காஞ்சனா பட சீரிஸ்தான். ஹாரர் திரைப்படத்தில் நகைச்சுவை புகுத்தி புதுமையை கொடுத்த ராகவா லாரன்ஸ் யுக்திக்கு, ஏக போக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அவர் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகிறது.

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர், காஞ்சனா 2 திரைப்படத்தில் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் நடிப்பதாக இருந்தது. இதற்கான பணிகளை கையில் எடுக்கும் நேரத்தில்தான், அவருக்கு இந்த படம் ஒத்து வராது என்று எனக்குத் தோன்றியது. அதனால் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன். ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில் அசால்ட் சேதுவாக நான்தான் நடிப்பதாக இருந்தது.

- Advertisement -

ஆனால் அந்த நேரத்தில் அது நடக்காமல் போய்விட்டது. இப்போது உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் முதல் பாதி இளைஞர்களுக்கு ஏற்றவாறு இருக்கும். இரண்டாம் பாதி குடும்ப ஆடியன்ஸ்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

அஜித் குமார் எனக்கு மிக நெருக்கம் எல்லாம் கிடையாது. அவர் அமர்க்களம் படத்தில் மகா கணபதி பாடலுக்கு முழுமையாக நடனம் ஆடி இருக்கலாம். ஆனால் அவர் என் நடனத்தை பார்த்துவிட்டு, அந்தத் தம்பி ஆடட்டும் நன்றாக நடனமாடுகிறார் என்று கூறினார். அவர் மட்டும் அன்று அந்த வார்த்தையை கூறவில்லை என்றால், நான் இன்று நடிகராக உங்கள் முன் அமர்ந்திருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்