- Advertisement -
Homeபொழுதுபோக்குபாகுபலி, ஆர் ஆர் ஆர் திரைப்படங்களைத் தொடர்ந்து மகேஷ் பாபுவை இயக்கும் ராஜமௌலி... படத்தில் இருந்து...

பாகுபலி, ஆர் ஆர் ஆர் திரைப்படங்களைத் தொடர்ந்து மகேஷ் பாபுவை இயக்கும் ராஜமௌலி… படத்தில் இருந்து இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்…

- Advertisement -

கச்சிதமான கதையும், அதனை 100% நம்ப வைக்கும் வகையில் திரைக்கதையும் இருந்தால் இங்கு வெற்றி சாத்தியம் என்பதை தனது திரைப்படங்களின் மூலம் உணர்த்தியவர் தெலுங்கு பட இயக்குனர் ராஜமௌலி. பல்வேறு வெற்றி திரைப்படங்களை அடுக்கிய இவரது இயக்கத்தில் முக்கிய திரைப்படமாக நாம் நான் ஈ படத்தை கூறலாம்.

 

- Advertisement -

இளைஞன் ஒருவன், வில்லனால் கொல்லப்பட, அவனது ஆத்மா ஒரு ஈயிடம் சரண் அடைய, அந்த ஈ வில்லனை எப்படி கொன்றது என்பதுதான் கதையம்சம். இதனை பல்வேறு தயாரிப்பாளர்களிடமும் அவர் கூறும் போது, இதனை எடுக்க யோசித்திருக்கிறார்களாம். இருப்பினும் விடாப்பிடியாக முயற்சித்து, அந்த திரைப்படத்தை ரசிகர்களுக்கு பரிசளித்தார் ராஜமவுலி.

 

- Advertisement -

இதன் பிறகு அவர் எடுத்த திரைப்படம்தான் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். இந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் இதன் திரைக்கதையை அமைத்திருந்தார் ராஜமவுலி. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.

 

அது மட்டுமல்லாமல், தெலுங்கு திரை உலகில் முதல்முறையாக ஒரு திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் குவித்தது. இதற்கு முன்பு இந்திய சினிமாவில் பிரம்மாண்டமாக ஏகப்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் அதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக அமைந்தது பாகுபலி திரைப்படம். இந்த திரைப்படம் கொடுத்த வெற்றி ராஜமவுலியை மகுடத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.

 

இதனைத் தொடர்ந்து அவர் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை இயக்கினார். இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் என தெலுங்கு சினிமாவின் இரண்டு முக்கிய நட்சத்திரங்கள் நடித்தனர். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படமும் ரசிகர்களை எந்த ஒரு விதத்திலும் ஏமாற்றவில்லை. அந்த வகையில் திரைக்கதையை சுவாரசியமாக அமைத்து விருந்து படைத்திருந்தார் ராஜமவுலி.

 

இந்த நிலையில் தற்போது அவர் தனது அடுத்த திரைப்படத்திற்காக, தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ்பாபுவுடன் கைகோர்த்து இருக்கிறார். ராமாயணத்தில் அனுமன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தான், மகேஷ் பாபுவின் ரோல் இதில் இருப்பதாக கூறுகிறார்கள். அமேசான் காடுகளில் இதன் படப்பிடிப்பை நடத்தவும் படக்குழு திட்டமிட்டு உள்ளதாம். இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பு, மகேஷ் பாபுவின் பிறந்தநாளான அக்டோபர் 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்