- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவைத் தொடர்ந்து சூரி படத்திலும் இடம்பெற்ற லப்பர் பந்து நாயகி... அட சந்தோசத்துல திரைப்படத்தோட கதையையும்...

சூர்யாவைத் தொடர்ந்து சூரி படத்திலும் இடம்பெற்ற லப்பர் பந்து நாயகி… அட சந்தோசத்துல திரைப்படத்தோட கதையையும் சொல்லிட்டாங்களே…

- Advertisement -

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று லப்பர் பந்து. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்தது. அது மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் திரைப்படமாக லப்பர் பந்து அமைந்துள்ளது.

 

- Advertisement -

இந்த திரைப்படத்தில், தினேஷின் மனைவியாக யசோதை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுவாசிகா. தனது நடிப்பிலும் சரி உடல் மொழியிலும் சரி எதார்த்தத்தை கண்முன்னே கொண்டு வந்து அவர் அசத்தியிருந்தார். படத்தின் ஆரம்பத்திலேயே, டிராக்டர் ஓட்டி வந்து ஆடுகளத்தை தகர்க்கும் கணமுள்ள கதாபாத்திரமாக சுவாசியாவை காட்டியிருப்பார் இயக்குனர்.

 

- Advertisement -

அது மட்டுமல்லாமல், அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமிக்க பெண்ணாக அவரை இயக்குனர் சித்தரித்து இருப்பார். இதற்கு ஏற்றது போலவும் சுவாசிகாவின் நடிப்பு அமைந்தது. இதற்கு முன்பு மலையாள திரைப்படங்களில் பல காட்சிகளில் வந்து போனாலும், லப்பர் பந்து திரைப்படம் தான் அவருக்கு ஒட்டுமொத்தமாக சொல்லிக் கொள்ளும் திரைப்படமாக அமைந்தது.

 

இப்படியான சூழலில் தற்போது சுவாசிகா சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளார். ஆர் ஜே பாலாஜி இயக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் திரிஷா. மலையாள நடிகர் இந்திரன், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, நட்டி உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

 

இதில் சுவாசிகாவின் கதாபாத்திரம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. இருப்பினும் அவருக்கு மிகவும் முக்கியம் உள்ள ரோலையே ஆர்ஜே பாலாஜி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது அவர் சூரியுடன் கைகோர்த்து இருக்கிறார்.

 

விலங்கு படத்தின் இயக்குனர் எடுக்கும் அடுத்த திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக வருகிறார். இந்த படத்திற்கு மாமன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சூரியின் சகோதரியாக சுவாசிகா நடிக்கிறாராம். சூரிக்கும், சுவாசிகாவின் மகனுக்கும் இடையேயான உறவை சித்தரிக்கும் திரைப்படமாக இது அமைகிறது. படத்தில், சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி வருவதாகவும் அவருக்கு டாக்டர் கதாபாத்திரம் என்றும் நடிகையே பேட்டியில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்