- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படம் தந்த மிக மோசமான தோல்வி, குழப்பத்தில் தவிக்கும் நடிகர் ரஜினிகாந்த் - பிரபலம்...

கூலி படம் தந்த மிக மோசமான தோல்வி, குழப்பத்தில் தவிக்கும் நடிகர் ரஜினிகாந்த் – பிரபலம் போட்டுடைத்த உண்மை!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தை நடிகர் கமல்ஹாசன் சொந்தமாக தயாரிக்கிறார். ஆனால் இந்த படத்தை டைரக்ட் செய்ய கமிட் ஆன சுந்தர் சி அடுத்து சிபி சக்ரவர்த்தி என அடுத்தடுத்து வெளியேறிய நிலையில் இப்போது அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை டைரக்ட் செய்ய கமிட் செய்யப்பட்டுள்ளார். இப்படி 2 இயக்குனர்கள் வெளியேற ரஜினிதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, கூலி படத்தின் படுதோல்விக்கு பிறகு சமீபகாலமாக ரஜினிகாந்த் மிக மோசமான ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து வருகிறார். அவரால் எந்த ஒரு முடிவும் தீர்மானமாக எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

முன்பெல்லாம் ஒரு படத்தின் கதையை கேட்டு ஓகே சொல்லிவிட்டால் பிறகு அந்த படத்தின் எந்த விஷயத்திலும் ரஜினி குறுக்கிடவே மாட்டார். படப்பிடிப்பில் இயக்குனர் சொல்கிறபடி நடித்துவிட்டு போய்விடுவார். ஆனால் இப்போது தலைவர் 173 படத்துக்கு ஓகே சொல்லிவிட்டு பிறகு துரந்தர் படம் போல அதை மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதனால் தான் இந்த படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி வெளியேறி விட்டார். வேட்டையன் படத்தில் கூட இதே போல் தான் ரஜினி செயல்பாடு இருந்துள்ளது. ஜெய்பீம் படம் போல அதை ஒரு பக்கா கதையாக ஸ்கிரிப்ட் செய்துதான் படத்தை துவங்கியுள்ளனர்.

- Advertisement -

ஆனால் படம் முழுக்க ஒரே கதையாக இருக்கிறது. என் படம் என்றால் சில பில்டப் விஷயங்கள் ஜாலியான விஷயங்கள் இருந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறி ரஜினி பல விஷயங்களை உள்ளே திணித்திருக்கிறார். குறிப்பாக பகத் பாசில் கேரக்டர் எல்லாம் ரஜினியே உள்ளே கொண்டு வந்ததுதான் என்று ஜெ பிஸ்மி அதில் கூறியிருக்கிறார்.

இப்படி ரஜினிகாந்த் செய்ததால் தான் ஜெய்பீம் படம் போல வேட்டையன் படமும் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது என்று பிஸ்மி கூறியிருப்பதும் இப்போது தலைவர் 173 படத்தில் இருந்து முதலில் சுந்தர் சி அடுத்து சிபி சக்ரவர்த்தி என 2 பேரும் வெளியேறியதற்கும் ரஜினியின் இந்த குழப்பமான மனநிலை தான் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்