இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 கேம் சேஞ்சர் என 2 படங்களும் சரியாக போகவில்லை. அதுவும் இந்தியன் 2 படம் இந்தியன் படம் போல மாஸ் ஹிட் படமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. அதே போல் நேரடி தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் படமும் தோல்வியடைந்தது.
இன்னும் லஞ்சம் ஊழல் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் என இயக்குனர் ஷங்கர் படங்கள் எடுப்பது ரசிகர்களுக்கு பெரிய திருப்தியை தரவில்லை. ஏனென்றால் அது சார்ந்த படங்கள் நிறைய வந்துவிட்டன. தவிர ஊழல் இல்லாத அரசியல்வாதிகளோ, அரசியல் அதிகாரிகளோ இல்லை என்ற சூழலுக்கு நாடு மாறிவிட்டதை மக்களே ஒரு விதத்தில் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
இந்த சூழலில் மீண்டும் மீண்டும் திரையில் மட்டுமே லஞ்சம் ஊழலை நிழல் நாயகன் எதிர்த்துக்கொண்டு இருப்பதை பார்த்து கைதட்டி ரசிக்க மக்களுக்கு விருப்பமில்லை. இது ஒரு டப்பா நாடகமாக அவர்களுக்கு தோன்றுவதால் இந்தியன் 2 கேம் சேஞ்சர் படங்களை ரசிகர்கள் ஏற்கவில்லை. தவிர புரட்சி வசனம் பேசிய நடிகர் கமல்ஹாசனே கடைசியில் நிஜத்தில் அரசியலில் திமுக ஆதரவு நிலைக்கு மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி படத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேல்பாரி நாவலின் ஒரு லட்சம் பிரதி விற்ற வெற்றி விழா வருகிற வெள்ளிக்கிழமை சென்னையில் நடக்கிறது.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கரும் கலந்துக்கொண்டு பேச உள்ளார். ஏற்கனவே வேள்பாரி நாவலை படமாக்கும் வேலைகளில் ஷங்கர் இருந்து வருகிறார். நடிகர் சூர்யா உள்படசில இந்தி நடிகர்களிடம் வேள்பாரி படத்தில் நடிப்பது குறித்து ஷங்கர் பேசிய நிலையில் அவர்கள் தரப்பில் யாரும் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் வேள்பாரி ஒரு லட்சம் பிரதி விற்ற வெற்றி விழாவில் நடிகர் ரஜினிகாந்தும், இயக்குனர் சங்கரும் இணைந்து கலந்துக்கொள்ள இருக்கின்றனர். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி எந்திரன் ரோபோ 2.0 ஆகிய வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் ஷங்கர். அதனால் ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் ரஜினியும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கலாம் அல்லது அவரே ஹீரோவாக நடிக்கலாம் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இதற்கான பதில் இந்த விழாவில் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.





