- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே மிரட்டிய நடிகர் ராமராஜன் - விழா மேடையில் உண்மையை போட்டுடைத்த...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே மிரட்டிய நடிகர் ராமராஜன் – விழா மேடையில் உண்மையை போட்டுடைத்த பிரபல டைரக்டர்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் அவரது .உயரம், புகழ், 73 வயதிலும் இன்னும் மாஸ் ஹீரோவாக நடித்து வரும் அவரது பெருமைகளை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அந்தளவுக்கு அவர் ரசிகர்களின் அபிமானம் பெறற நடிகராக இப்போதும் கொண்டாடப்படுகிறார். இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் ராமராஜன், மக்கள் நாயகன் என்று அழகைப்படும் முன்னணி ஹீரோவாக கடந்த 1990களில் வலம் வந்தவர். நடிகை நளினியின் முன்னாள் கணவர். எம்ஜிஆரின் தீவிர ரசிகர். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. அதிமுக எம்பியாக பதவி வகித்தவர்.

- Advertisement -

ஒரு முறை அதிமுக தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுவிட்டு ராமராஜன் காரில் திரும்பியபோது, மதுரை அருகே மோசமான விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த ராமராஜன், உயிர் பிழைப்பதே கஷ்டம் என்ற ஆபத்தான நிலை ஏற்பட்டது. மதுரையில் தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

அப்போது ஓ பன்னீர் செல்வம், செங்கோட்டையன் இருவரையும் அழைத்த ஜெயலலிதா, இந்த மாதிரியான ஒரு நிலைமையில் நான் இருந்தால், எப்படி கவனித்து என்னை காப்பாற்றுவீர்களோ, அப்படி போய் ராமராஜனை காப்பாற்றுங்கள் என உத்தரவிட, பதறியடித்துப் போன அவர்கள் பெரிய பெரிய டாக்டர்களை எல்லாம் வரவழைத்து, சிகிச்சையளித்து ராமராஜனை உயிர் பிழைக்க செய்திருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் இந்த விபத்துக்கு பிறகு பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த ராமராஜன் சமீபமாக படங்களில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இப்போது சாமானியன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், முக்கியமான ஒரு விஷயத்தை விழா மேடையில் பேசும்போது குறிப்பிட்டார்.

நடிகர் ராமராஜன் 1980, 90களில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்தவர். கரகாட்டக்காரன் படம் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய வெற்றிப் படமாக ஓடி வசூலை குவித்தது. இப்போது கரகாட்டக்காரன் படத்துக்கு இருக்கிற இமேஜ், மவுசு குறையவில்லை. அந்த காலகட்டத்தில் ராமராஜன் படங்களில் வசூலை பார்த்து நடிகர் ரஜினிகாந், நானே பயந்து போயிருக்கிறேன், என்ற என்னிடம் கூறியிருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டு பேசினார்.

- Advertisement -

சற்று முன்