- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த நட்சத்திர நாயகிகளின் உண்மையான பெயர் இதுவா? அட இப்படி ஒரு விஷயமே தெரியாதே -...

இந்த நட்சத்திர நாயகிகளின் உண்மையான பெயர் இதுவா? அட இப்படி ஒரு விஷயமே தெரியாதே – ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அர்ஜூன் என்னுடைய உண்மையான பெயர் ஸ்ரீனிவாசன். வீட்டில் சீனு என்று அழைப்பார்கள். நண்பர்கள் அசோக் என அழைப்பார்கள். நான் நடித்த முதல் படத்தில் என் கேரக்டர் பெயர் அர்ஜூன். பிறகு அதையே எனக்கு படத்தில் எனக்கு வைத்து விட்டனர். அதுவே எனக்கு நிலைத்து விட்டது என்று கூறியிருந்தார்.

இதே போல் பல ஹீரோக்களின் உண்மையான பெயர் வேறுதான். அத்துடன் சினிமா நடிகைகளில் பலரது பெயர் உண்மையான பெயர் அல்ல. அவர்களது பெற்றோர் வைத்த பெயர் வேறு. ஆனால் சினிமாவில் நடிக்க வந்த பிறகு அவர்களது பெயர்களை இயக்குனர்களோ அல்லது அவர்களாகவோ மாற்றிக் கொண்டு விட்டனர்.

- Advertisement -

அப்படி பெயர் மாற்றிய பிரபல நடிகைகளின் பெயர்களை இப்போது பார்க்கலாம். நடிகை நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். தேவயானியின் உண்மையான பெயர் சுஷ்மா. சிம்ரனின் பெயர் ரிஷி பாலா நாவல், நடிகை நக்மாவின் பெயர் நந்திதா நடிகை சீதாவின் பெயர் சாய் ரந்திரி நடிகை ரேவதியின் பெயர் ஆஷா.

அதே போல் நடிகை மாளவிகாவின் உண்மையான பெயர் ஸ்வேதா கோனூர் நடிகை சங்கவி பெயர் காவியா நடிகை மும்தாஜ் பெயர் நக்மாகான் நடிகை குஷ்புவின் பெயர் நக்கத் கௌசல்யாவின் பெயர் சங்கீதா நடிகை மீரா ஜாஸ்மின் உண்மையான பெயர் ஜாஸ்மின் மேரி. நடிகை சுகன்யாவின் பெயர் ஆர்த்தி தேவி.

- Advertisement -

அதே போல் மறைந்த நடிகை சௌந்தர்யாவின் பெயர் சௌமியா நடிகை சினேகாவின் பெயர் சுகாசினி நடிகை மோகினியின் பெயர் மகாலட்சுமி நடிகை பானுப்பிரியாவின் உண்மையான பெயர் மங்கா ஆனந்த பானு நடிகை சில்க் ஸ்மிதாவின் பெயர் விஜயலட்சுமி லட்லபதி. நடிகை ரேகாவின் பெயர் சுமதி ஜோஷி பைன்.

நடிகை ரம்பாவின் பெயர் விஜயலட்சுமி நடிகை ரோஜாவின் பெயர் ஸ்ரீலதா நடிகை ஊர்வசியின் பெயர் கவிதா ரஞ்சனி நடிகை அபிராமியின் பெயர் திவ்யா நடிகை கோபிகாவின் பெயர் கார்லி ஆண்டோ நடிகை லைலாவின் பெயர் குயின் சந்திரா மேரி என தெரிய வந்துள்ளது. இப்படி பிரபல நடிகைகள் பலரும் தங்களது சொந்த பெயரை இழந்துவிட்டு சினிமா புகழில் கிடைத்த பெயரோடு வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்