- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்து பாலிவுட்டை குறிவைக்கும் ரஜினி, லோகேஷ் படத்துல ரஜினி பிளான் பண்ற தரமான சம்பவம் என்ன...

அடுத்து பாலிவுட்டை குறிவைக்கும் ரஜினி, லோகேஷ் படத்துல ரஜினி பிளான் பண்ற தரமான சம்பவம் என்ன தெரியுமா – நீங்க வேற லெவல் தலைவரே

- Advertisement -

இந்திய சினிமாவில், சமீபமாக வரும் பல படங்கள் பல நூறு கோடிகளை எளிதாக வசூலில் தொட்டு விடுகின்றன, சில படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் என்ற மிக உயர்ந்த சிகரத்தை அடைந்துவிடுகின்றன. உதாரணமாக, இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம், 1117 கோடி ரூபாயை கடந்திருப்பது பெரிய சாதனைதான்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த தங்கல் படம்தான் முதலில், வசூலில் ஆயிரம் கோடியை கடந்த படம். இதைத்தொடர்ந்து பாகுபலி, ஆர்ஆர்ஆர், பதான், காந்தாரா, கேஜிஎப், புஷ்பா, பொன்னியின் செல்வன், விக்ரம், ஜெயிலர் போன்ற சில படங்கள் வசூல், பல நூறு கோடிகளை வெகு எளிதாக தாண்டியது. ஆனால், ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தொடவில்லை.

- Advertisement -

இதில் பதான், ஜவான், ஆர்ஆர்ஆர், கேஜிஎப் போன்ற சில படங்கள் மட்டும் ஆயிரம் கோடி ரூபாயை கடந்து வசூலை குவித்திருக்கிறது. இதே போல், தமிழ் படங்களும் ஆயிரம் கோடி இலக்கை எட்ட வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் தமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் ஸ்டார்களை போல, நாமும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்துள்ளது.

அந்த வகையில், லியோ படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்ட வேண்டும் என்பது, லியோ படக்குழுவினர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அல்லது, ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையாக உள்ள ரூ. 700 கோடி என்ற இலக்கை கடந்தாக வேண்டும் என்ற ஆர்வத்திலும், விஜய் ரசிகர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே ரஜினிகாந்த், தற்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி 170 படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் 171 படத்தை இயக்குவது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பது கவனிக்கத்தக்கது. இவர் செய்ய போவது பான் இந்தியா படம்தான். அதனால் இந்த படத்தின் மூலம், ரூ. ஆயிரம் கோடி இலக்கை அடைய ரஜினிகாந்த் திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தி படவுலகில், ரஜினிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, தனது 171 வது படத்தில் பாலிவுட் நடிகர், நடிகையர் அதிகமாக இடம்பெற செய்யவும், இந்த படத்துக்கான இந்தி வெர்சனில் 400 கோடி முதல் 500 கோடி வரை இந்தியில் இருந்து வசூலித்தால், மீதி கோடிகளை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் இருந்து வசூலித்து விடலாம் என்று கணக்கு போட்டுள்ள ரஜினி, இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறனுடனும் ஆலோசிக்க முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்