- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் எனக்கு போட்டியா? - லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ...

நடிகர் விஜய் எனக்கு போட்டியா? – லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அதிரடி பதில்

- Advertisement -

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கேமியோ ரோல் செய்திருக்கிறார். இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் இப்போது அவரது 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில், தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில், ரஜினிகாந்த் நடித்திருப்பது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கெஸ்ட் ரோல் அப்பியரன்ஸ் என்று சொன்னால், படம் முழுக்க 45 நிமிடங்கள் ரஜினி இடம்பெறும் காட்சிகள் வருகின்றன. அவருக்கு சண்டை காட்சிகளும் உள்ளது.

இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், தயாரிப்பாளர் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன், மகள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சவுந்தர்யா உள்ளிட்ட ஏராளமான ரசிகர்களும் விழாவில் கலந்துக்கொண்டனர்.

- Advertisement -

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் நிறைய விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது, நடிகர் விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நான் ஒரு படத்தில் ஷூட்டிங்கில் இருந்த போது, மேலே நின்றுக்கொண்டு, சிறுவனாக இருந்த விஜய் பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது எஸ்ஏ சந்திரசேகர், அவன் என் பையன்தான். சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறான். முதலில் நன்றாக படி, படித்த முடித்த பிறகு, நடிகனாகலாம் என்று அட்வைஸ் பண்ணுங்கள் என்று கூறினார்.

விஜய் நடிப்பில் படிப்படியாக வளர்ந்து இப்போது ஒரு உயர்ந்த இடத்துக்கு வந்திருக்கிறார். அரசியல், சமூக பணிகள் என அடுத்தடுத்த அவரது கவனம் இருந்து வருகிறது. அதற்கு என்னோட வாழ்த்துகள். நான் ஜெயிலர் பட விழாவில் சொன்ன காக்கா, கழுகு கதையை வேறு மாதிரி ஊடகங்கள் திருப்பி விட்டன. விஜய் எனக்கோ, விஜய்க்கு நானோ போட்டியல்ல. அப்படி சொல்வது அவருக்கும் கவுரவம் அல்ல, எனக்கும் கவுரவம் அல்ல. ரஜினிக்கு ரஜினிதான் போட்டி, விஜய்க்கு விஜய்தான் போட்டி, என்று ஆணித்தரமாக பேசி, காக்கா கழுகு கதை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஜினிகாந்த்.

- Advertisement -

சற்று முன்