நடிகர் ரஜினிகாந்த் இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. திருவனந்தபுரம், நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி, மும்பை, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இந்த படப்பிடிப்பு தொடர்ந்து நடந்துது.
இந்த நிலையில் இப்போது இதற்கு பின்னணியில் நடந்த திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தான் வேட்டையன் படத்தை தயாரிக்கிறது. லைகா நிறுவனம் வேட்டையன், விடாமுயற்சி, இந்தியன் 2, கேம் சேஞ்சர் உள்ளிட்ட நான்கு படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது.
அஜீத்குமார் நடித்து வந்த விடாமுயற்சி படத்தை ஒரு கட்டத்தில் நிதியாதாரம் இல்லாத காரணத்தால் கிடப்பில் போட்டு விட்டது. பொறுத்து பொறுத்து பார்த்த நடிகர் அஜித்குமார், ஒரு கட்டத்தில் நான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப் போகிறேன், அதற்கு முன்பாக நீங்கள் படப்பிடிப்பை தயார் செய்து விட்டு அழைத்தால், நடிக்க வருகிறேன். இல்லை என்றால் நான் குட் பேட் அக்லி படத்தை முடித்துவிட்டு பிறகு உங்கள் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று கட் அண்ட் ரைட் ஆக சில தினங்களுக்கு முன் பேசியிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலானது.
இப்போது அதே போன்ற ஒரு சம்பவம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பிலும் நடந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பு, இன்னும் சில தினங்களில் முடிவடையும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் நீடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் படப்பிடிப்புக் குழு சத்தம் இல்லாமல் இந்த படப்பிடிப்பை கிடப்பில் போட்டது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் மிகவும் அப்செட் ஆன நடிகர் ரஜினிகாந்த் லைகா நிறுவனத்தை அழைத்து, என்னுடைய சினிமா பயணத்தில் இதுவரை ஒரு படம் கூட இப்படி நான் நடித்த படம் கிடப்பில் போடப்பட்டதில்லை. உங்கள் நிறுவன தயாரிப்பில்தான் இப்படி நடந்திருக்கிறது. நான் ஜூன் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்.
அதற்குள் வேட்டையன் படப்பிடிப்பை முடிப்பதாக இருந்தால் நான் வந்து நடித்துக் கொடுக்கிறேன். அப்படி இல்லை என்றால், கூலி படத்தில் நடித்து முடித்த பிறகுதான் உங்கள் படத்தில் நடிப்பேன் என்று அவரும் கட் அண்ட் ரைட்டாக லைகா நிறுவனத்திடம் பேசியிருக்கிறார். அஜீத்குமாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே இப்படி ஒரு நிலைமையா என்று சினிமா ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





