தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். துவக்கத்தில் சில படங்களில் வில்லனாக நடித்த அவரை தயாரிப்பாளர் கலைஞானம், பைரவி படம் மூலம் கதாநாயகனாக நடிக்க வைத்தார். அன்று முதல் இன்று வரை வெற்றிகளை, தோல்விகளை மாறி மாறி சந்தித்தாலும் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 74வது பிறந்த நாளை கொண்டாடினர். இதையொட்டி அவர் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் இருந்து ‘சிக்குடு’ பாடல் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைப் தந்துள்ளது. நேற்று அவரது பிறந்த நாளுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, என்னுடைய பிறந்தநாள் அன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மதிப்பிற்குரிய அன்புத்தம்பி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆந்திரா முதலமைச்சர் நண்பர் சந்திரபாபு நாயுடு,
மதிப்பிற்குரிய ஓ. பன்னீர்செல்வம், வைகோ திருமதி விகே சசிகலா, திருநாவுக்கரசர், துரைமுருகன், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த், திருமாவளவன், வாசன், ஏசி சண்முகம், சீமான், அன்புத்தம்பி விஜய் மற்றும் என்னை வாழ்த்திய அனைத்து மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும்,
திரையுலகில் இருந்து நண்பர் கமல்ஹாசன், வைரமுத்து, எஸ் பி முத்துராமன், விஜயகுமார், சத்யராஜ், பாலகிருஷ்ணா, ஷாருக்கான், அமீர்கான், பார்த்திபன், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் அநேக நடிகர், நடிகைகள் திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்,
ஊடக நண்பர்கள், தொலைக்காட்சியினர், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அனைத்து துறை சார்ந்த என்னுடைய நல விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு, வளர்க தமிழ் மக்கள், ஜெய்ஹிந்த்! உழைத்திடுவோம், மகிழ்ந்திடுவோம் என அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.





