நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தை டைரக்ட் செய்து தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ஹீரோ யாரும் நடிக்கவில்லை. நயன்தாராவை மையப்படுத்திய இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார்.
டாக்டர் படமும் பெரிய வெற்றிப் படமாக நெல்சனுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பாராட்டை பெற்றுத் தந்தது. அதன்பிறகு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்த போதிலும் வணிக ரீதியாக கணிசமான லாபத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அள்ளித் தந்தது.
இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கினார். ரஜினிகாந்த் ஜெயிலராக இந்த படத்தில் நடித்திருந்தார். வசந்த் ரவி ரம்யா கிருஷ்ணன் மிருணாள் மேனன் மோகன்லால் விநாயகன் ஜாக்கி ஷெராப் சிவராஜ்குமார் கிஷோர் சுனில் ரெடின் கிங்ஸ்லி சரவணன் உள்ளிட்டோர் நடித்த ஜெயிலர் படம் மாஸ் ஹிட் ஆனது.
இந்த படத்தில் காவலய்யா பாடலுக்கு தமன்னா போட்ட குத்தாட்டம் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆனது. அதே நேரத்தில் தங்கப்பதக்கம் படத்தின் லேட்டஸ்ட் வெர்சன் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கலாய்த்தாலும் இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத் இசை பெரிதும் கைகொடுத்து தூக்கி விட்டது. அப்போதே ஜெயிலர் 2 படம் உருவாகும் என்றும் சன் பிக்சர்ஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வேட்டையன் கூலி படங்களில் நடித்த ரஜினிகாந்த் அந்த படங்கள் வெளியான நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார். 8 மாதங்களாக ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் பெரும்பாலான காட்சிகள் படம்பிடித்து முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பின் போது இயக்குனர் நெல்சன் ரஜினியிடம் பேசிக்கொண்டிருந்த போது ஏதேச்சையாக ஒரு கதையை நெல்சன் அவரிடம் சொல்லியிருக்கிறார். அதை கேட்டவுடன் ஆச்சரியப்பட்ட ரஜினிகாந்த், கதை ரொம்பவும் நன்றாக உள்ளது என்று பாராட்டி இருக்கிறார். இந்த படத்தை நாமே சேர்ந்து பண்ணுவோம் என்று உடனே கூறியிருக்கிறார். இதைக்கேட்டு நெல்சன் திக்குமுக்காடி போயிருக்கிறார். அதனால் ஜெயிலர் ஜெயிலர் 2 படங்களை தொடர்ந்து மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகி உள்ளது. ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க வாய்ப்புள்ளது.





