- Advertisement -
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ஜெயிலர் 2 படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் 110 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பளத்தை தவிர்த்து படத்தின் லாபத்திலும் ரஜினிகாந்துக்கு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சிறப்பான வரவேற்பை பெற்றால் படத்தின் மூலம் கிடைக்கும் மொத்த லாபத்தில் ரஜினிகாந்துக்கு இன்னும் 70 கோடி ரூபாய் பிராபர்டி ஷேர் தருவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனால் ஜெயிலர் 2 படத்திற்காக ரஜினி சம்பளம் ரூ. 180 கோடி என்கின்றனர்.





