- Advertisement -
Homeபொழுதுபோக்குராஜ்கிரணையே சுத்தலில் விட்ட பிரபல கியூட் நடிகை, பிடிகொடுக்காததால் பின்னாலேயே 4 வருடம் திரிந்த சம்பவம்

ராஜ்கிரணையே சுத்தலில் விட்ட பிரபல கியூட் நடிகை, பிடிகொடுக்காததால் பின்னாலேயே 4 வருடம் திரிந்த சம்பவம்

- Advertisement -

1990களில் தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்கவர்ந்த நடிகராக திகழ்ந்தவர் ராஜ்கிரண். இவர் கிராமத்து திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். ராஜ்கிரண் ஒரு நடிகர் மட்டுமல்லாது, ஒரு இயக்குனரும் கூட. “அரண்மனை கிளி”, “என்னெப் பெத்த ராசா” ஆகிய திரைப்படங்களில் நடித்து அதனை இயக்கியும் உள்ளார். அதே போல் “ராசாவே உன்னை நம்பி”, “என்னெப் பெத்த ராசா”, “என் ராசாவின் மனசுல” போன்ற திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.

நகைச்சுவை புயல் வடிவேலு தமிழ் சினிமாவில் ஜொலிக்க காரணமாக இருந்தவர் ராஜ்கிரண்தான் என்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த நிலையில் ராஜ்கிரண் ஒரு நடிகையை பிடித்துப்போய் அவருக்காக அலைந்து திரிந்துள்ளார். அவர் யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கிய “என் ராசாவின் மனசுல” திரைப்படம் ராஜ்கிரணுக்கு மிகப் பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த வெற்றியால் ராஜ்கிரணின் ரேஞ்சே வேற லெவலுக்கு சென்றுவிட்டது.

இந்த வெற்றிக்கு காரணம் மீனாதான் என்று நினைத்தாராம். இதனால் மீனாவை அவருக்கு தனிப்பட்ட முறையில் பிடித்துப்போனதாம். எப்படியாவது தனது அடுத்த படத்திலும் மீனாவை புக் செய்து இன்னொரு வெற்றி திரைப்படம் கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவில் ராஜ்கிரண் இருந்தாராம். அதன்படி மீனாவை புக் செய்ய அவரது தாயாரை சந்தித்தாராம் ராஜ்கிரண். ஆனால் மீனா படுபிசியான நடிகையாக மாறியிருந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கு மீனாவை ஒப்பந்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாம்.

இவ்வாறு அவரால் பல வருடங்கள் மீனாவை கையிலேயே பிடிக்க முடியவில்லையாம். எனினும் அதன் பின் 4 வருடங்களுக்கு பிறகு “பாசமுள்ள பாண்டியரே” திரைப்படத்தில் மீனா ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தாராம்.

சற்று முன்