- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை நயன்தாராவுக்கு போட்டியாக களம் இறங்கிய ரஜினி பட நடிகை… அட அவங்கதான் இனிமே லேடி...

நடிகை நயன்தாராவுக்கு போட்டியாக களம் இறங்கிய ரஜினி பட நடிகை… அட அவங்கதான் இனிமே லேடி சூப்பர் ஸ்டாராம்… – தரமான சம்பவமா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நட்சத்திர நாயகியாக முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. கடந்த 2005ம் ஆண்டில் இயக்குனர் ஹரி இயக்கிய ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா, தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகை நயன்தாரா 2 பிள்ளைகளுக்கு வாடகைத்தாய் மூலம் அம்மாவான நிலையில் இப்போதும் நயன்தாராவுக்கு தென்னிந்திய சினிமாவில் மார்க்கெட் குறையவில்லை. அவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் அலைமோதுகின்றனர்.

- Advertisement -

முதலில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் தெலுங்கில் பல அதிரடி சண்டை படங்களில் நடித்த விஜயசாந்தி. அதன்பிறகு அந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் நடிகை நயன்தாராவுக்கு கிடைத்தது. சமீபத்தில் ஒரு அறிவி்பபை வெளியிட்ட நடிகை நயன்தாரா, இனிமேல் நான் லேடி சூப்பர் ஸ்டார் இல்லை. நயன்தாரா என அழைத்தாலே போதும் என்று கூறியிருந்தார்.

இப்போது ரஜினி படத்தில் நடித்த நடிகை ரக்சிதா ராம் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். கன்னட சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்து வருபவர் ரக்சிதா ராம். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படத்தில் வில்லியாக நடித்திருந்தார். நேற்று (3ம் தேதி) ரக்சிதா ராம் தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

- Advertisement -

அப்போது ரக்சிதா ராம் கன்னடத்தில் கதையின் நாயகியாக நடித்த லேண்ட் லார்ட் என்ற படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் அவருக்கு பெயருக்கு முன்னால் லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் கூறுகையில், கூலி படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டினார். அது மிகப்பெரிய விருது கிடைத்த மகிழ்ச்சியை கொடுத்தது.

அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ஒரு படத்தில் நான் நடிக்கிறேன். கூலி படத்துக்கு பிறகு நெகட்டிவ் கேரக்டர்கள் அதிகமாக எனக்கு வருகிறது. எனது பெற்றோர் இப்போது எனக்கு வரன் பார்த்து வருகிறார்கள். அதனால் கூடிய சீக்கிரமே திருமணம் செய்து கொள்வேன் என்று ரக்சிதா ராம் கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராதான். இப்போது அவருக்கு போட்டியாக அதே டைட்டிலில் ரக்சிதா ராமும் இறங்கியுள்ளார். இது நயன்தாராவுக்கு மற்ற மொழி படங்களில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது ரசிகர்களிடையே கேள்வியாக எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்