- Advertisement -
Homeபொழுதுபோக்குதேர்தலில் தயவு செய்து அதை மட்டும் செய்யாதீங்க, கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கறேன் - நடிகர் ராமராஜன்...

தேர்தலில் தயவு செய்து அதை மட்டும் செய்யாதீங்க, கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கறேன் – நடிகர் ராமராஜன் பகிரங்கமாக விடுத்த கோரிக்கை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். மக்கள் நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ராமராஜன் பல சூப்பர் ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். குறிப்பாக கரகாட்டக்காரன் போன்ற அவரது படங்கள் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய பிளாக்பஸ்டர் படங்களாக இருந்தன.

நடிகர் ராமராஜன் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். அதனால் ஜெயலலிதாவின் விசுவாசியாக மாறிய அவருக்கு ஜெயலலிதா எம்பி பதவி கொடுத்து அழகு பார்த்தார். மேலும் தமிழ்நாடு முழுவதும் அதிமுக தேர்தல் பிரசாரங்களிலும் ராமராஜன் ஈடுபட்டார். சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்த அவர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து மறுபிறவி எடுத்து வந்தார்.

- Advertisement -

அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் கட்சிப் பணிகளில் அவ்வப்போது ஈடுபட்டு வந்தார். இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடிகர் ராமராஜனை அதிமுக மூத்த நிர்வாகிகள் கண்டு கொள்ளவில்லை. சினிமாவிலும் ராமராஜன் சில படங்களில் நடித்த போதும் பழைய வரவேற்பையும் இடத்தையும் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகம் வேட்பாளருக்கு ஆதரவாக ஆலங்குளம் தொகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இது தவெக கட்சிக்காக அல்ல. தனது நெருங்கிய நண்பரின் மகன் என்பதால் இந்த பிரசாரத்தில் ஈடுபட்டு அவருக்கு ஆதரவு திரட்டி வருகிறேன். எப்போதுமே நான் எம்ஜிஆரின் தீவிர விசுவாசி தான். இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறேன் என்றும் ராமராஜன் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராமராஜன் கூறியதாவது, தேர்தலில் ஜெயித்து யார் ஆட்சிக்கு வர வேண்டும் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை மக்கள் தான் முடிவு பண்ண வேண்டும். 1987ல் அதிமுகவில் இருந்த நான் போகாத ஊர் இல்லை. மிதிக்காத தெரு இல்லை. அந்த கட்சி இப்போது எனக்கு என்ன செய்தது?

நோட்டா என்பது வேஸ்ட். நோட்டா என்கிற ஓட்டே போடக் கூடாது. நோட்டாவுக்கு போட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் அவர்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நோட்டாவுக்கு போடாதீங்க. உங்க வாக்கை உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு போடுங்க. வாக்குரிமையை ஒவ்வொருவரும் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று நடிகர் ராமராஜன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்