- Advertisement -
இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் சாய்பல்லவி யஷ் உள்ளிட்டோர் நடித்த இராமாயணா படம் கடந்த 5ம் தேதி வெளியானது. அமோக வரவேற்பை பாராட்டை பெற்ற இந்த படம் 23 நாட்களில் உலக அளவில் 1808 கோடி ரூபாய் வசூல் செய்து இந்திய சினிமாவில் முதலிடம் பிடித்துள்ளது. துரந்தர் 2 படம் 1690 கோடி ரூபாய், புஷ்பா 2 படம் 1600 கோடி ரூபாய், பாகுபலி 2 படம் 1,540 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் இராமாயணா படம் 1800 கோடி ரூபாய் வசூலில் இந்த 3 படங்களின் வசூல் சாதனையை தாண்டி முந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.





