- Advertisement -
Homeபொழுதுபோக்குசீதையாக சாய்பல்லவி நடிக்கும் ராமாயணம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - இதில் ராவணன்...

சீதையாக சாய்பல்லவி நடிக்கும் ராமாயணம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – இதில் ராவணன் கேரக்டரில் நடிக்கும் ஹீரோ யார் தெரியுமா? பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல…

- Advertisement -

பிரேமம் என்ற மலையாள படம் மூலம், மலர் டீச்சர் என்ற கேரக்டரில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சாய் பல்லவி. முதல் படத்திலேயே தனது வசீகரமான சிரிப்பால், அசத்தலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். படம் பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவி என்ற அவரது பெயரை மறந்து, மலர் டீச்சர் என்றே அவரை அழைக்க துவங்கி விட்டனர்.

தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷூடன் மாரி 2 படத்தில் சாய் பல்லவி நடித்தார். அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இதில் மாரி 2 அளவுக்கு, என்ஜிகே படம் பெரிய அளவில் சாய் பல்லவிக்கு வரவேற்பை பெற்றுத் தரவில்லை. ஆனால் கார்கி படத்தில் அவரது நடிப்பு அழுத்தமாக, சிறப்பாக இருந்தது.

- Advertisement -

பாவக் கதைகள் படத்தில் நடித்த சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கு, இந்தியிலும் சில படங்களிலும் நடித்துள்ளார். கோவையை அடுத்துள்ள ஊட்டி கோத்தகிரியை சேர்ந்த சாய் பல்லவி, டாக்டருக்கு படித்தவர். ஆனால் மருத்துவம் பார்க்க பிடிக்காமல், சினிமாவில் நடிக்க வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயனுக்கு சாய்பல்லவி ஜோடியாக நடித்த அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடிக்க சாய்பல்லவிக்கு வாய்ப்புகள் குவிகிறது. எனினும் தனக்கான கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் சாய்பல்லவி மிக கவனமாக இருக்கிறார்.

- Advertisement -

இந்தியில் இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் படம் ராமாயணம். இந்த படத்தில் ராமர் கேரக்டரில் ரன்பீர் கபூர், சீதையாக சாய்பல்லவி நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபி தியோல் நடிக்கின்றனர். ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இராமாயணம் படம் 3 பாகங்களாக இல்லாமல், தற்போது இந்த படத்தை 2 பாகங்களாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ராமாயணம் படத்தின் 2 பாகங்கள் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ராமாயணம் 1 பாகம் வருகிற 2026ம் ஆண்டில் தீபாவளிக்கும், 2ம் பாகம் 2027ம் ஆண்டில் தீபாவளிக்கும் வெளியாகும் என்றும் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்தப் படத்தில் ராவணன் கேரக்டரில் நடிப்பது கேஜிஎப் நாயகன் கன்னட நடிகர் யாஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ராவணன் கேரக்டரில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் ராமாயணம் படம் 1ம் பாகமே திரைக்கு வரும் என்பதால், ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்