- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க ஒரு அனகோண்டா.. எதுக்கு இப்படி நடிக்கிறீங்க?" - சாண்ட்ராவை கதறவிட்ட ரம்யா ஜோ! பிக்பாஸ்...

நீங்க ஒரு அனகோண்டா.. எதுக்கு இப்படி நடிக்கிறீங்க?” – சாண்ட்ராவை கதறவிட்ட ரம்யா ஜோ! பிக்பாஸ் வீட்டில் வெடித்தது புது பூகம்பம்.

- Advertisement -

விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. இப்போது பைனலிஸ்ட் போட்டியாளர்களாக கானா வினோத் விக்கல்ஸ் விக்ரம் சாண்ட்ரா திவ்யா கணேஷ் அரோரா மற்றும் சபரி ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்களில் முதல் பைனலிஸ்ட் ஆக அரோரா டிக்கெட் டூ பினாலே போட்டியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரத்தில் கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து சாண்ட்ராவை தாக்கிய விவகாரத்தில் சிக்கிய பார்வதி கம்ருதீன் இருவரும் ரெட்கார்டு காட்டி வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு சுபிக்‌ஷா எவிக்‌ஷன் ஆகி வெளியேற சென்றார். அதன்பிறகு 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நிலையில் இந்த சீசனில் பங்கேற்று எவிக்‌ஷனில் வெளியே போன முன்னாள் போட்டியாளர்கள் ரீ என்ட்ரி தந்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் முதலில் வியானா வந்தார். அதன்பிறகு வாட்டர்மெலன் திவாகர் பிரவீன் காந்தி அடுத்து பிரவீன் ராஜ் ஆகியோர் வந்தனர். அவர்களை தொடர்ந்து ரம்யா ஜோ மற்றும் அப்சரா வீட்டுக்குள் வந்த நிலையில் இப்போது கெமி வீட்டுக்குள் வந்து விட்டார். இதுவரை முன்னாள் போட்டியாளர்கள் 7 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

தனது கணவர் பிரஜினுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு கன்டஸ்டன்ட் ஆக வந்தவர் சாண்ட்ரா. பிரஜின் எவிக்‌ஷனில் வெளியே போன நிலையில் சாண்ட்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் பைனலிஸ்ட் ஆக இருந்து வருகிறார். அவர் கம்ருதீன் பார்வதி விவகாரத்தில் நடந்துக்கொண்ட விதத்தை பார்த்து நடிப்பு அரக்கி வலிப்பு நாயகி சாண்ட்ரா என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி தந்துள்ள ரம்யா ஜோ இந்த விமர்சனத்தை உறுதிபடுத்துவது போல வீட்டுக்குள் பகிரங்கமாக பேசியது மட்டுமின்றி சாண்ட்ராவிடமும் இதுகுறித்து நேரடியாக பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் எவிக்ட் ஆகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போன போது சாண்ட்ரா என்னை கட்டிப்பிடித்து கதறி அழுதார். அவரது அன்பை நினைத்து பூரித்துப் போனேன்.

ஆனால் வெளியே நான் போன பிறகு ஒரு நாள், சோபாவில் அமர்ந்து பேசும்போது சாண்ட்ரா என்னை பாம்பு என்று விமர்சனம் செய்து பேசுகிறார். நான் பாம்பு என்றால் இவர் அனகோண்டாவா, உண்மையான சாண்ட்ரா என்பவர் யார்? என்னை கட்டிப்பிடித்து அழுதவரா? அல்லது என்னை பாம்பு என்று பேசியவரா? எதற்காக இவர் இப்படி நடிக்கிறார் என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து சாண்ட்ராவிடமும் நேரடியாக பேசிய ரம்யா ஜோ. எதுக்கு இப்படி நடிக்கறீங்க? நீங்க நடிக்கறது ஊருக்கே அப்பட்டமா தெரியுது என்றும் விமர்சனம் செய்தது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்