நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். நேஷனல் கிரஷ் என்றும் அழைக்கப்படுபவர். இவர் சமீபத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனா, கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து பிறகு திருமணம் நின்றுவிட்டது.
அதன் பிறகு படங்களில் தொடர்ந்து நடித்த ராஷ்மிகா இப்போது விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்திருக்கிறார். இந்த நிலையில் ராஷ்மிகாவின் தாயார் பேசியதாக ஒரு ஆடியோ இணையத்தில் வைரலானது. அதில் ராஷ்மிகாவை சினிமாவில் நடிப்பதை நிறுத்துமாறு ரக்சித் ஷெட்டி சொன்னதாகவும் ராஷ்மிகா முத்தக்காட்சியில் நடித்தபோது ரக்சித் பயங்கரமாக கோபம் அடைந்ததாகவும் பேசியிருக்கிறார். இந்த வீடியோ வைரலான நிலையில் ராஷ்மிகா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரக்சித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, ஊடகங்கள் மற்றும் இணையத்தில் சில தனி நபர்களிடமிருந்து வந்த துன்புறுத்தல்கள் தவறான தகவல்கள் தனிப்பட்ட தாக்குதலை நான் எதிர்கொண்டு 8 ஆண்டுகள் ஆகின்றன. வியூஸ்க்காகவும் ரீச்சுக்காகவும் என்கேஜ்மென்ட்டுக்காகவும் நான் சொல்லும் வார்த்தைகளும் தவறான தகவல்களும் வெறுப்பும் பரப்பப்படுவதை நான் கவனித்து இருக்கிறேன்.
இவை அனைத்தும் எனக்கு வேதனையை காயத்தை ஏற்படுத்தினாலும் நான் தொடர்ந்து பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து வந்தேன். சில நேரங்களில் நியாயமற்ற விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டேன். ஆனால் எனக்கு நான் உண்மையாக இருந்து அன்பையும் மகிழ்ச்சியையும் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு கடத்தி வந்தேன். ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் எல்லை மீறப்பட்டு விட்டது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக நம்பப்படும் பழைய தனிப்பட்ட உரையாடல்களை சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இல்லாமல் பரப்பி வருகிறார்கள்.
இது முழுக்க முழுக்க ஒருவரின் தனியுரிமை மீதான தாக்குதல். தவறான தகவல்களையும் அவதூறான தகவல்களையும் பரப்புகிறார்கள். வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி வளர்ச்சி நோக்கி நேர்மறையை பரப்பும் அதே வேளையில் ஒரு சிலர் மற்றொரு நபரின் கண்ணியத்தையும் அமைதியையும் விலையாக கொடுத்து வெறுப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்துவது துரதிஷ்டவசமானது.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த தாக்குதல் என் மீது மட்டும் இருந்த போது அமைதியாக இருந்தேன். ஆனால் இன்று அது என்னை சார்ந்த மற்றவர்களையும் பாதிக்கும் போது நான் அமைதியாக இருக்க முடியாது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அடுத்த 24 மணி நேரத்தில் என்னை பற்றி பரவும் தவறான தகவல்களையும் பதிவுகளையும் ஊடகத்தினர் தனி நபர்கள் இன்ப்ளுயன்ஸ்கள் அனைவரும் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று ராஷ்மிகா மந்தனா அந்தப் பதிவில் கூறியிருக்கிறார்.





