நடிகை ராஷ்மிகா மந்தனா துவக்கத்தில் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டா ரெட்டிக்கு ஜோடியாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அவரது நடிப்பு அந்த படத்தில் வேற லெவலில் இருந்தது. தொடர்ந்து இந்திய அளவில் ராஷ்மிகா மந்தனாவுக்கு வரவேற்பை பெற்றுத் தந்த படம் புஷ்பா.
இந்த படத்தில் அல்லு அர்ஜூன் காதலியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக பாடல் காட்சிகளில் அவரது நடன அசைவுகள் ரசிகர்களை கிறங்கடித்தது. புஷ்பா படம் தந்த அபரிதமிதமான வெற்றியால் இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக மாறினார். இப்போது புஷ்பா 2 படத்திலும் நடித்திருக்கிறார்.
புஷ்பா படம் தந்த புகழை அடுத்து தமிழில் விஜயுடன் வாரிசு படத்திலும், கார்த்தியுடன் சுல்தான் என்ற படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஆனால் இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக பலத்த தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்ற அவர், அனிமல் என்ற படத்தில் படுக்கையறை காட்சிகளிலும், முத்தக்காட்சிகளிலும் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
ராஷ்மிகா மந்தனாவின் மிரட்டலான கவர்ச்சியை பார்த்து, ரசிகர்கள் மிரண்டு போய்விட்டனர். பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் விதமாக உதட்டு முத்தக் காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் அவர் காட்டிய தாராளத்தை பார்த்து பலரும் அதிர்ந்து போய்விட்டனர். எனினும் அனிமல் படம் விமர்சன ரீதியாக மிகவும் தரம் கெட்ட படமாக கூறப்பட்டது.
இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களின் முன்னணி நாயகியாக நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா இப்போது விளம்பர படங்களிலும் மிக அதிகளவில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் என சிலவற்றை ராஷ்மிகா பதிவிட்டுள்ளார். அதில் உணவு, சிரிப்பு, தூக்கம், பயணம், நல்ல புத்தகம், காபி, அவரது செல்ல நாய்க்குட்டி என அவற்றின் புகைப்படங்களை வெளியிட்டு, இவை அனைத்தும் என் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்று அதில் பதிவிட்டுள்ளார். இவை அனைத்தும் என் வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.





