- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் சிவகார்த்திகேயனுடன் வில்லனாக மோதுகிறாரா நடிகர் ரவிமோகன்…? - சுடச்சுட லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் வில்லனாக மோதுகிறாரா நடிகர் ரவிமோகன்…? – சுடச்சுட லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

நடிகர் ரவிமோகன் ஹீரோவாக பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக ஆரம்பத்தில் இருந்தன. ஜெயம் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சமி சந்தோஷ் சுப்ரமணியம் உனக்கும் எனக்கும் தனி ஒருவன் போகன் வனமகன் என பல படங்கள் வெற்றிவிழா படங்களாக இருந்தன.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு அவரது படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. குறிப்பாக அகிலன் இறைவன் சைரன் 108 பிரதர் காதலிக்க நேரமில்லை என கடந்த சில ஆண்டுகளாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் பிளாப் ஆகின. தொடர் தோல்வி படங்களால் அவர் நிலைகுலைந்து போன நிலையில் குடும்ப வாழ்க்கையிலும் ஏற்பட்ட சிக்கல்களால் அவர் பாதிக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த சூழலில் பாடகி கெனிஷாவுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவர் இப்போது ரவிமோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக துவங்கியிருக்கிறார். மேலும் நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தையும் டைரக்ட் செய்து வருகிறார்.

இதற்கிடையே நடிகர் ரவிமோகன் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் இருந்தாலும் படம் பார்த்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரவிமோகன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லன் நடிப்பில் அவர் ரசிகர்களை மிரட்டியிருந்தார்.

- Advertisement -

இப்போது தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு 80 நாட்கள் வரை நடத்தப்பட உள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். சேயோன் படத்தை முடித்துவிட்டு அடுத்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் அடுத்து நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தில் வில்லன் கேரக்டர் மிகவும் பவர்ஃபுல் கேரக்டர். அதுவும் சைக்கோ தனமான ஒரு வில்லன் கேரக்டர் என்பதால் இந்த கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கேரக்டரில் மிகவும் பிரபலமான ஒரு நட்சத்திர ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என்று சிவகார்த்திகேயன் கூறிய நிலையில் நடிகர் ரவிமோகன் அந்த கேரக்டரில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் மறுக்கும் பட்சத்தில் விஜய் சேதுபதிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்