- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் வாழ்க்கையில் நான் கத்துக்கிட்ட பாடம் அதுதான்… அதை மட்டும் இழந்துடாதீங்க - பராசக்தி விழாவில்...

என் வாழ்க்கையில் நான் கத்துக்கிட்ட பாடம் அதுதான்… அதை மட்டும் இழந்துடாதீங்க – பராசக்தி விழாவில் ரசிகர்களுக்கு அட்வைஸ் தந்த பிரபல நடிகர்!

- Advertisement -

பெரும்பாலான நடிகர்கள் திரைப்பட விழாக்களில் பேசும் போது வெளிப்படையாக பேச மாட்டார்கள். தங்களது இமேஜ் போய்விடும் என்பதால் திரைப்படம் சார்ந்து மட்டுமே பேசிவிட்டு நகர்ந்து விடுவார்கள். இது 30 40 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம். இப்போதெல்லாம் சீனியர் நடிகர்கள் ரஜினி கமல் மட்டுமின்றி இளம் நடிகர்கள் கூட வெளிப்படையாக தங்களது கருத்துகளை பகிரங்கமாக பேசி விடுகின்றனர்.

ஆனால் இப்படி வெளிப்படையாக பல பேர் முன்னிலையில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு அசாத்தியமான துணிச்சலும் அவசியம்தான். அதுவும் தனது வாழ்க்கை சார்ந்த விஷயங்களை சமூக வலைதளங்கள் பெருகிய விட்ட இன்றைய சூழலில் பேசி விடுவது பலவிதங்களில் டிரோல் செய்துவிடவும் வாய்ப்பாகி விடுகிறது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த ஆண்டில் பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்கி இணையத்தில் வைரலானவர்தான் நடிகர் ரவி மோகன். தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த அவர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுவும் தாக்கல் செய்தார். இன்னும் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் பாடகி கெனிஷாவுடன் நெருக்கமான நட்பில் அவர் இருந்து வருகிறது.

இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த பராசக்தி படம் வருகிற 10ம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் ரவி மோகனும் இந்த விழாவில் பங்கேற்றார். இதுதான் அவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்த விழாவில் நடிகர் ரவி மோகன் பேசியதாவது, பராசக்தி படத்தில் நான் நடித்ததற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.முதலில் இது சுயமரியாதையை பேசுகின்ற ஒரு திரைப்படம். என் சொந்த வாழ்க்கையில் இருந்து சுயமரியாதை எவ்வளவு முக்கியம் என்பதை கற்றுக் கொண்டேன்.

நீங்கள் யாரும் உங்கள் சுயமரியாதையை மட்டும் இழக்க வேண்டாம். இன்னொரு காரணம் இயக்குனர் சுதா கொங்கரா. இந்த படம் பலரின் கடுமையான உழைப்பால் தங்கம் போல உருவாகி இருக்கிறது என்று நடிகர் ரவி மோகன் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரால் நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன் என்று ஏற்கனவே நடிகர் ரவிமோகன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்