- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் கொடுமைக்காரியா… குடும்பத்தை பிரித்தவளா? நடிகர் ரவி மோகனின் அறிக்கையால் அவரது மாமியார் ஆவேசம்!

நான் கொடுமைக்காரியா… குடும்பத்தை பிரித்தவளா? நடிகர் ரவி மோகனின் அறிக்கையால் அவரது மாமியார் ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்திருக்கிறார். மேலும் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்த விவாகரத்து வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதற்கிடையே பாடகி கெனிஷா என்பவருடன் நடிகர் ரவிமோகன் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றார். திருமணமான புதிய தம்பதி போல ஒரே மாதிரியான பட்டாடையில் ஒன்றாக அவர்கள் அதில் கலந்துக்கொண்டது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்த நிலையில் நடிகர் ரவி மோகனும் ஒரு பதிவை செய்திருந்தார். அதில் என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். பொன் முட்டையிடும் வாத்து போல என்னை பயன்படுத்திக் கொண்டனர். என் பிள்ளைகளை பார்க்க விடாமல் தடுத்தனர். என் பாதி சொத்துகளை அவர்களால் இழந்துவிட்டேன் என்று பல புகார்களை கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரவி மோகனின் மாமியார், ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார். இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரவி மோகன் நடித்த சில படங்களை தயாரித்தது அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது, கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். கடந்த 2007ம் ஆண்டு வீராப்பு என்ற படத்தை முதலில் தயாரித்தேன். ஒரு பெண்ணாக இத்தனை காலம் சினிமா துறையில் நீடித்திருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். இத்தனை ஆண்டுகளில் பட வெளியீடு தவிர வேறு எதற்காகவும் நான் மீடியா முன்பு வந்தது இல்லை. இப்பொழுது முதன்முறையாக என்னைப்பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.

கடந்த சில காலமாகவே கொடுமைக்காரி குடும்பத்தை பிரித்தவள் பணப்பேய் சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னைப் பற்றி உலவி வருகின்றன. அப்போதே இதற்கு விளக்கம் தர வேண்டும் என விரும்பினேன். ஆனால் என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மௌனமாக இருந்து விட்டேன். இப்பொழுதும் நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னை பற்றி திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வரும் பொய்கள் உண்மையாகிவிடும் என்பதால் இந்த விளக்கம் என்று அந்த பதிவில் ரவி மோகனின் மாமியார் சுஜாதா விஜயகுமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்